ஜேக்கப் சகாயகுமார் அருணி
| ஜேக்கப் | |
|---|---|
| பிறப்பு | ஜேக்கப் சகாயகுமார் அருணி சூன் 4, 1974 உத்தமபாளையம், தமிழ்நாடு |
| இறப்பு | நவம்பர் 4 2012 (அகவை 38) சென்னை |
| இறப்பிற்கான காரணம் |
மாரடைப்பு |
| தேசியம் | இந்தியர் |
| அறியப்படுவது | சமையல் கலை நிபுணர் |
ஜேக்கப் என்ற 'ஜேக்கப் சகாயகுமார் அருணி[1] (சூன் 4, 1974 - நவம்பர் 4, 2012), சென்னையைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர். ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்[2] உள்ளிட்ட பலருக்கும் உணவு சமைத்து கொடுத்துள்ளார். பல்வேறு பெரிய உணவங்களுக்கும் தலைமை சமையற்காரராக[2] பணி புரிந்துள்ள இவர், சங்கரா வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங்க் துறையின் இயக்குனராக இருந்தார்.[2]
பொருளடக்கம் |
இளமைக் காலம் [தொகு]
இவர் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர்.[3] இவர் நான்கு வயதில்[4] தாய், மருத்துவர் விமலா அருணியிடமிருந்து[1] சமையல் கலை கற்றுக்கொண்டதாகவும், 14-வயதில்[5] இருந்து சமையல் பயிற்சி பெற்றதாகவும் பல்வேறு கருத்து நிகழ்கிறது. இவர் மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர்.[4][1]
கின்னஸ் விருது [தொகு]
கடந்த 2010–ம் ஆண்டு மார்ச் மாதம் 24 மணி நேரத்தில் 485 வகையான உணவுகளை தயார் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர்.[4][5][6][7]
நூல்கள் [தொகு]
- மணக்கும் தமிழகம் [8]
- கிச்சன் கிளினிக்[9]
- ஆஹா என்ன ருசி - அசைவ சமையல்[9]
- ஆஹா என்ன ருசி - சைவ சமையல்[9]
நிகழ்ச்சிகள் [தொகு]
சன் தொலைக்காட்சியில், ஆஹா என்ன ருசி என்ற சமையல் தொடரில் தன்னுடைய சமையல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்களித்து வந்தார்.[10]
இறப்பு [தொகு]
மாரடைப்புக் காரணமாக தனியார் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 05,நவம்பர்,2012 அன்று காலமானார்.[10]
குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Chef Jacob Sahaya Kumar Aruni dies of heart attack in Chennai". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
- ↑ 2.0 2.1 2.2 "Jacob’s kitchen no more". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
- ↑ ""ஆஹா என்ன ருசி" புகழ் ஜேக்கப் திடீர் மரணம்!". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
- ↑ 4.0 4.1 4.2 "சமையல் நிபுணர் மாரடைப்பால் ஜேக்கப் மரணம்". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
- ↑ 5.0 5.1 "சமையல் கலையில் கின்னஸ் சாதனை படைத்த செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
- ↑ "சன் டிவி சமையல் கலை நிபுணர் செஃப் ஜேக்கப் மரணம்". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
- ↑ "‘கின்னஸ்’ சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
- ↑ மணக்கும் தமிழகம் ( பகுதி 1- வெஜிடேரியன்)
- ↑ 9.0 9.1 9.2 "எழுத்தாளர் (Author) - செஃப் ஜேக்கப்() » பக்கம் - 1". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.
- ↑ 10.0 10.1 "சமையல் கலையில் கின்னஸ் சாதனை படைத்த செஃப் ஜேக்கப் காலமானார்". பார்த்த நாள் நவம்பர் 06, 2012.