எஸ். பி. பாலசுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ். பி. பாலசுப்ரமணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஸ். பி. பாலசுப்ரமணியம்

பின்னணித் தகவல்கள்
பிறப்பு ஜூன் 4, 1946 (1946-06-04) (அகவை 68)
பிறப்பிடம் இந்தியாவின் கொடி ஆந்திரப் பிரதேசம்
இசை வகை(கள்) திரைப்படப் பாடல்
தொழில்(கள்) பாடகர் , நடிகர் , திரைப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர்
இசைத்துறையில் 1966 -
வலைத்தளம் இணையத்தளம்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.

தொடக்கம்[தொகு]

1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார். இவர் தமிழில் முதலில் பாடியது சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலாகும். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா வெளிவந்தது.

சாதனைகள்[தொகு]

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ்.பி.பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

வருடம் திரைப்படங்கள் மொழி கதாப்பாத்திரம் குறிப்பு
1969 பெல்லண்டி நூரெல்ல பந்த தெலுங்கு
1971 முகமது பின் துக்லக் தமிழ் சிறப்புத் தோற்றம்
1980 பக்கிண்டி அம்மாயி தெலுங்கு பால ராஜு
1982 பாலூன்டு சதுரங்க கன்னடம்
மல்லே பந்திரி தெலுங்கு சேக் மொசஸஷ் மூர்த்தி
1983 பாரத் 2000 கன்னடம்
திருகு பான கன்னடம் பாடலில் சிறப்பு தோற்றம் "இதே நாடு இதே பாஷே"
1987 மனதில் உறுதி வேண்டும் தமிழ் மருத்துவர்
1988 பிரேம தெலுங்கு வெங்கடேஷ்க்கு ஆலோசகராக
விவாஹ பூஜனம்பூ தெலுங்கு சிறப்புத் தோற்றம்
கல்லு தெலுங்கு
1990 கேளடி கண்மணி தமிழ்
1991 குணா தமிழ்
சிகரம் தமிழ்
1993 திருடா திருடா தமிழ்
1994 காதலன் தமிழ்
1995 பாட்டுப் பாடவா தமிழ்
1996 காதல் தேசம் தமிழ்
1997 நந்தினி தமிழ்
பெரிய மனுஷன் தமிழ்
ரட்சகன் தமிழ்
உல்லாசம் தமிழ்
1998 ஜாலி தமிழ்
1999 மாயா தமிழ்
2000 பிரியமானவளே தமிழ்
2010 நாணயம் தமிழ்
2014 திருடன் போலீஸ் தமிழ்
2015 மூனே மூனே வார்த்தை தமிழ்

இசையமைப்பாளராக[தொகு]

வருடம் திரைப்படம் மொழி இயக்குனர் தயாரிப்பாளர்/பேனர்
1977 கன்னியா குமரி தெலுங்கு தசரி நாராயண ராவ் சரிகம ஆர்ட்ஸ்
1978 சந்தர்ப கன்னடம்
1979 கேப்டன் கிருஷ்ணா தெலுங்கு கே. எஸ். ஆர். தாஸ்
ரா ரா கிருஷ்ணய்யா தெலுங்கு
தூர்ப்பு வெள்ள ரயிலு தெலுங்கு பாபு
1980 ஹம் பஞ்ச் (பின்னணி இசை) ஹிந்தி பாபு எஸ்.கே. ஃபிலிம்ஸ்
1981 ஒஹம்ம கத தெலுங்கு வசந்த சென்
சங்கீதா தெலுங்கு
1983 துடிக்கும் கரங்கள் தமிழ் சி. வி. ஸ்ரீதர் கே. ஆர். கங்காதரன்
உருண்ட சங்கரண்டி தெலுங்கு தசரி நாராயண ராவ்
1984 பர்யாமணி தெலுங்கு விஜய பாபிநீது ஸ்ரீநிவாசா தயாரிப்பு
சீதாம்மா பெல்லி தெலுங்கு பாபு முத்து ஆர்ட் மூவிஸ்
1985 பங்காரு சிலகா தெலுங்கு மகேஸ்வரி மூவிஸ்
புல்லெட் தெலுங்கு
தேவரல்லதனே கன்னடம் சாமுண்டி தயாரிப்பு
தூங்கல்லோ தூரா தெலுங்கு
ஜாக்கி தெலுங்கு முத்து ஆர்ட் மூவிஸ்
கொங்குமுடி தெலுங்கு விஜய பாபிநீது ராகவேந்திரா சினி கிரியேசன்ஸ்
மயூரி தமிழ் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் பீ.ஆர். கிரியேசன்ஸ் உஷாகிரண் மூவிஸ் கூட்டணியில்
மயூரி தெலுங்கு சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் உஷாகிரண் மூவிஸ்
முத்துலா மனவரலு தெலுங்கு ஜந்த்யல முத்து ஆர்ட் மூவிஸ்
1986 பெடெ கன்னடம் வஜ்ரகிரி ஃபிலிம்ஸ்
மஹதீருடு தெலுங்கு ஸ்யாம் பிரசாத் ஆர்ட்ஸ்
நாச்சி மயூரி (பின்னணி இசை) ஹிந்தி டி. ராமா ராவ் லட்சுமி தயாரிப்பு
பதமதி சந்திய ராகம் தெலுங்கு ஜந்த்யல குமலூரி சாஸ்திரி, மீர் அப்துல்லா
சௌபாக்கியலட்சுமி கன்னடம் பார்கவ வாசு சித்ரா
1987 கௌதமி தெலுங்கு ராதா மாதவ ஃபிலிம்ஸ்
லாயர் சுகாசினி தெலுங்கு வம்சி ஜெயகிருஷ்ணா கம்பைன்ஸ்
பிரதீமா தெலுங்கு
ராமு தெலுங்கு சுரேஷ் தயாரிப்பு
1988 சின்னூடு பெட்டூடு தெலுங்கு ரெலங்கி நரசிம்ம ராவ் ஸ்ரீதேவி மூவிஸ்
கல்லு தெலுங்கு எம். வி. ரகு மகாசக்தி ஃபிலிம்ஸ்
நீக்கு நாக்கு பெல்லண்ட தெலுங்கு ஜந்த்யல ஜே.ஜே. மூவிஸ்
ஓ பார்ய கத தெலுங்கு மௌலி உஷாகிரண் மூவிஸ்
பிரம்மயானம் தெலுங்கு உஷாகிரண் மூவிஸ்
ரமண சமண கன்னடம் பீ. சுப்பாராவ் வாசு சித்ரா
விவாஹ போஜனம்பூ தெலுங்கு ஜந்த்யல ஜே.ஜே. மூவிஸ்
1990 சித்தார்த்தா தெலுங்கு
1991 மகாயானம் தெலுங்கு
சிகரம் தமிழ் அனந்து கவிதாலயா தயாரிப்பு
தையல்காரன் தமிழ் எஸ். பி. முத்துராமன் கலைப்புலி இன்டர்நேஷனல்
ஜெய்தர யாத்ரா தெலுங்கு ஸ்ரவந்தி மூவிஸ்
1992 பெல்லியப்பா பனகாரப்பா கன்னடம் பூர்ண பிரஜ்ன மது பங்காரப்பா
கிஸீர சஹார கன்னடம் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
ஊர்பஞ்சாயத்து தமிழ் ஜே. மகேந்திரன்
1993 முதின மாவ கன்னடம் ஓம் சாய் பிரகாஷ் விஜய ஸ்ரீதேவி கம்பைன்ஸ்
2003 உன்னை சரணடைந்தேன் தமிழ் சமுத்திரக்கனி கேபிடல் சினி ஒர்க்ஸ்
போங்கடா நீங்களும் உங்க அரசியலும் தமிழ்

தேசியவிருதுகள்[தொகு]

வருடம் திரைப்படம் பாடல் மொழி
1996 மின்சார கனவு தங்க தாமரை தமிழ்
1995 சங்கீத சகர கனயோகி பஞ்சக்ஷற கவை உமண்டு க்ஹுமண்டு கன கர் கன்னடம்
1988 ருத்ரவீன செப்பாழனி உண்டி தெலுங்கு
1983 சாகர சங்கமம் வேதம் அனுவனுவுன தெலுங்கு
1981 ஏக துஜே கே லியே தேரே மேரே பீச் மேனி இந்தி
1979 சங்கர்பாரணம் ஓம் கார நதானு தெலுங்கு

தொலைக்காட்சியில்[தொகு]

பெயர் மொழி குறிப்புகள்
நதி எங்கே போகிறது தமிழ் நெடுந்தொடர்
சன்னல் தமிழ் நெடுந்தொடர்
வானம்பாடி தமிழ் இசை நிகழ்ச்சி
பாடுதே தீயாக தெலுங்கு இசை நிகழ்ச்சி
பாடலானி உந்தி தெலுங்கு இசை நிகழ்ச்சி
என்டரு மஹனுபவலு தெலுங்கு நெடுந்தொடர்
என்னோடு பாட்டுப் பாடுங்கள் தமிழ் இசை நிகழ்ச்சி
இதே தம்பி ஹாடுவேனு கன்னடம் இசை நிகழ்ச்சி
இசைவானில் இளையநிலா, ஏர்டெல் சூப்பர் சிங்கர் தமிழ் இசை நிகழ்ச்சி, சிறப்பு நடுவர்

மேற்கோள்கள்[தொகு]

1.