வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவணங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. மத்திய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு.

வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அறவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன.

பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன.

பொருளடக்கம்

[தொகு] வரி அறவிடுவதன் நோக்கங்கள்

அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை:

பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன:

அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றிலேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன. பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும்:

  • வரிச் சுமையைத் தனியார் மற்றும், வரி செலுத்தும் வணிகத் துறையினர் போன்ற வகுப்பாரிடையே பரவலாக்குதல்.
  • தனியார் மற்றும் சமூதாயத்தின் பல்வேறு வகுப்பாரிடையே வளங்களை மறுபகிர்வு செய்தல். முற்காலத்தில், பிரபுத்துவ சமுதாயத்தினரின் நலனுக்காக ஏழை மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில், வசதி படைத்தோரிடமிருந்து அறவிடப்படும் வரிப் பணத்திலிருந்து, வசதியற்றோர், வயதானோர் போன்றவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
  • வெளிநாட்டு நிதியுதவி, இராணுவ உதவி போன்றவற்றுக்கு நிதியளித்தல்,
  • பொருளாதாரத்தின் பருவினப்பொருளியல் செயற்பாட்டு விளைவுகள்மீது செல்வாக்குச் செலுத்துதல் (இதற்கான அரசின் வழிமுறைகள் அதன் நிதிக் கொள்கை எனப்படுகின்றது),
  • குறிப்பிட்ட சில வகைப் பரிமாற்றங்களை மற்றவற்றிலும் கவர்ச்சியானவை ஆக்குவதன்மூலம், பொருளாதாரத்தில் நிலவும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புப் போக்குகளை மாற்றியமைத்தல்.

[தொகு] விமர்சனங்கள்

  • நியாமற்ற வரி
  • அதிக வரி உழைப்போரின் வருமானத்தை சூறையாடுகிறது, அவர்களின் உற்சாகத்தை, முதலீட்டை இடையூறு செய்கிறது.
  • அரசின் சேவைகளை பெறாமல் விட்டாலும், வரி செலுத்தாமல் இருக்க உரிமை இல்லை.

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=வரி&oldid=1125723" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்