பீட்டில்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த பீட்டில்ஸ்

(இடமிருந்து வலம்) பௌல் மக்கார்ட்டினி, ரிங்கோ ஸ்டார், ஜார்ஜ் ஹாரிஸன், ஜான் லெனன் பங்குபெற்றிய The Ed Sullivan Show 1964ல்.
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம் லிவர்பூல் - இங்கிலாந்து
இசை வகை(கள்) ராக்/பாப் இசை
இசைத்துறையில் கி.பி. 1960 – 1970
அங்கத்தவர்கள்
ஜான் லெனன்
பௌல் மக்கார்டினி
ஜார்ஜ் ஹாரிஸன்
ரிங்கோ ஸ்டார்
முன்னாள் அங்கத்தவர்கள்
ஸ்டுவர்ட் ஸ்ட்கிளிப்
பீட் பெஸ்ட்

பீட்டில்ஸ் (The Beatles) இங்கிலாந்தின் லீவர்பூல் மாகாணத்தைச் சார்ந்த ஒரு ராக் இசைக்குழுவாகும். 1960-ல் இக்குழு உருவானது. 1962 முதல் இந்த இசைக்குழுவில் ஜான் லெனன், பௌல் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரிங்கோ ஸ்டார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இசைக்குழு வரலாற்றில் இவர்களுடைய காலத்தில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலுமே தனிப்பெருமை வாய்ந்த குழுவாக இருந்த பெருமை பீட்டில்ஸையே சாரும். மிகவும் புகழ் பெற்ற இசைக்குழுவாக இவர்கள் வளர்ந்தபோது, பீட்டில்மேனியா எனப்படும் அளவுக்கு இக்குழு மீது அதிகப்படியான விருப்பம் ரசிகர்களிடையே வளர்ந்தது. அவர்களின் பாட்டுக்களும் நாளாக நாளாக மிகவும் முன்னேற்றம் அடைந்தது. வளர்ச்சித் தத்துவங்களின் ஒளிவிளக்காய் திகழ்ந்த அவர்களின் பாட்டுக்கள் 1960-களில் சமூக மற்றும் கலாச்சார புரட்சிகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டில்ஸ்&oldid=1348132" இருந்து மீள்விக்கப்பட்டது