என்றீக்கே என்றீக்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(என்றிக்கே என்றீக்கசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

என்றிக்கே என்றீக்கசு (Henrique Henriques, ஹென்றிக்கே ஹென்றீக்கஸ் அல்லது அன்றீக்கே அன்றீக்கசு[1] (15201600), போர்த்துக்கீச இயேசு சபை போதகரும் மதப்பரப்புனரும் ஆவார். இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை தமிழ்நாட்டில் மதப்பரப்புப் பணிகளில் ஈடுபட்டவர். ஐரோப்பாவில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டவர் இவரே. கிபி 1546 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த இவர் ஆரம்பக்காலத்தை கோவாவில் கழித்த பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த புனித பிரான்சிசு சேவியரின் (1506-1552) அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழில் எழுதவும் பேசவும் திறமை பெற்றார்.

தம்பிரான் வணக்கம் தம்பிரான் வணக்கம்
தம்பிரான் வணக்கம்
கிரிசித்தியானி வணக்கம்

தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் (எழுத்துகளில்) அச்சுப் புத்தகமான "தம்பிரான் வணக்கம்" என்னும் நூலை வெளியிட்டார். இதனால் இவர் தமிழ் அச்சுக்கலையின் தந்தை" எனப் போற்றப்படுகிறார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ் மொழியே. நூல் பதித்த இடம் கொல்லம் என்றும், பதித்த நாள் அக்டோபர் 20, 1578 என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறித்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.அக்காலத்தில் தமிழ் மொழி எழுத்துகளுக்கான அச்சுகளையும் முதன்முதலாக உருவாக்க ஏற்பாடு செய்தவர். கோன்சால்வசு என்னும் அச்செழுத்துக்களை வெட்டுவதில் சிறந்த கருமானின் உதவியைப் பெற்று தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்டன[2] பாதிரி என்றீக்கே என்றீக்கசு தமிழ் நூலை போர்த்துகீசு நாட்டில் லிசிபனில் வெளியிட்டார்).

இவர் இறந்த பின்னர் இவரது உடல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=என்றீக்கே_என்றீக்கசு&oldid=1496281" இருந்து மீள்விக்கப்பட்டது