போர்னியோ
| போர்னியோ | |
|---|---|
Topography of Borneo |
|
| புவியியல் | |
| அமைவு | தென்கிழக்கு ஆசியா |
| ஆள்கூறுகள் | |
| தீவுக்கூட்டம் | Greater Sunda Islands |
| பரப்பளவு | 743,330 கிமீ² |
| உயர் புள்ளி | கினபாலு மலை (4,095 மீ) |
| ஆட்சி | |
| மாவட்டங்கள் | பெலாயிட் புரூணை-முவாரா டெம்புரோங் டூடொங் |
| மாகாணங்கள் | மேற்கு கலிமந்தான் மத்திய கலிமந்தான் தெற்கு கலிமந்தான் கலிமந்தான் |
| மாநிலங்கள் | சபா சரவாக் |
| இனம் | |
| மக்கள் தொகை | 16 மில்லியன் (2000) |
| அடர்த்தி | 22/கிமீ² |
போர்னியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இந்தத் தீவு இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் ஆளுமையில் உள்ளது. இது உலகின் மூன்றாவது பெரிய தீவாக அறியப் படுகிறது.
இந்தோனேசியாவில் இத்தீவு கலிமந்தான் என்று அழைக்கப் படுகிறது. கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்னியோ என்பது சபா மற்றும் சரவாக் மாநிலங்களைக் கொண்ட மலேசியப் பகுதியாகும்.
புவியியல் [தொகு]
போர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் தென் சீனக் கடல் உள்ளது. வடகிழக்கே சுளு கடல், கிழக்கே செலிபிஸ் கடல், மக்கசார் நீரிணை உள்ளன. தெற்கே ஜாவாக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை உள்ளன.
போர்னியோவின் மேற்கே மலே மூவலந்தீவு, மற்றும் சுமாத்திரா ஆகியன அமைந்துள்ளன. தெற்கே ஜாவாவும், வடகிழக்கே பிலிப்பைன்ஸ் ஆகியன உள்ளன.போர்னியோ என்பது மிகவும் பழமையனா மழைகாடுகள் ஒன்ட்ரு.