சீன மொழி
| சீன மொழி 汉语/漢語 ஹான்யூ, 中文 ஜொங்வென் |
||
|---|---|---|
| நாடுகள்: | சீனா, தாய்வான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்சு மற்றும் பிற சீனமொழி பேசுவோர் வாழும் பகுதிகள் | |
| பகுதி: | (majorities): கிழக்கு ஆசியா (சிறுபான்மையர்): தென்கிழக்கு ஆசிய, மற்றும் சீன மொழியினர் வாழும் பிறபகுதிகள் |
|
| பேசுபவர்கள்: | அண்ணளவாக 1.176 பில்லியன் | |
| நிலை: | சீன மொழி, எல்லம்l: 1
மண்டரின்: 1 |
|
| மொழிக் குடும்பம்: | சீன-திபெத்திய சீன மொழி |
|
| எழுத்து முறை: | சீன எழுத்துs | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: |
|
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | In the PRC: National Language Regulating Committee[1] In the ROC: Mandarin Promotion Council In Singapore: Promote Mandarin Council/Speak Mandarin Campaign[2] |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | zh | |
| ISO 639-2: | chi (B) | zho (T) |
| ISO/FDIS 639-3: | பலவாறு: zho — Chinese (generic) cdo — Min Dong cjy — Jinyu cmn — Mandarin cpx — Pu Xian czh — Huizhou czo — Min Zhong gan — Gan hak — Hakka hsn — Xiang mnp — Min Bei nan — Min Nan wuu — Wu yue — Cantonese |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும் (சீனம்). சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி.
பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கிறது. பேச்சில் பல வட்டார மொழிகள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட மாண்டரின் சீனாவின் அதிகாரப்பூர்வ பேச்சு மொழியாகும். இது பெய்ஜிங்கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.
பொருளடக்கம் |
சீன எழுத்து மொழி [தொகு]
முதன்மைக் கட்டுரை: சீன எழுத்து மொழி
சீனத்தின் எழுத்து இரண்டு பிரிவுகளைக் கொண்டது. மரபுவழி எழுத்து முறை, எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறை. எளிமைப்படுத்தப்பட்ட எழுத்து முறையே இன்று சீனாவில் நியமப்படுத்தப்பட்டுள்ளது. இது நியம மாண்டரின் பேச்சை அடிப்படையாகக் கொண்டது.
சீன மொழியின் ஒலிப்பியல் [தொகு]
சீனப் பேச்சு மொழி இடத்துக்கிடம் வேறுபடும். ஒரு நிலப்பகுதியில் இருக்கும் மக்களின் பேச்சு மொழி வேற்று நிலப்பகுதி மக்களின் பேச்சு மொழியை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அப்படி இருக்கையில் அதை வேறு மொழியாகவும் வகைப்படுத்தும் முறையும் இருக்கின்றது.
பின்யின் என்பது சீர்தரம் செய்யப்பட்ட மாண்டரின் சீன மொழியின் பலுக்கலை (சொல் ஒலிப்புகளை) ரோமன் எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். ரோமன் எழுத்துக்கள் சீன மொழியின் ஒலிப்புகளை தருவதற்காகப் பயன்படுகின்றதே தவிர, பின்யின் முறை சீனமொழியை ஆங்கிலப்படுத்துவதல்ல.
பின்யின் முறையானது ரோமன் எழுத்துக்களை அறிந்தவர்கள் சீன மொழியைக் கற்க உதவுகின்றது. பின்யின் என்னும் சொல்லில் உள்ள பின் என்னும் சொற்பகுதி எழுத்து என்பதனையும், யின் என்னும் சொற்பகுதி ஒலி என்பதனையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட சிறு மாறுபாடுடைய பின்யின் முறையை ஹான்யூ பின்யின் (Hanyu Pinyin (Simplified Chinese: 汉语拼音; Traditional Chinese: 漢語拼音; pinyin: Hànyǔ Pīnyīn) என அழைக்கின்றனர்.
இவற்றையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- http://www.chinadaily.com.cn/english/doc/2004-09/03/content_371457.htm The legacy and future of the Chinese language
- செவிக்கு இசையாகும் சீனமொழி
சீன மொழியைக் கற்றல் [தொகு]
- தமிழ் மூலம் சீனம், பாடம் 1 - (தமிழில்)
- தமிழரும் சீனரும் மணந்துகொண்டால்... சுப்பிரமணியன் சீனிவாசன்
- http://www.aboutchinese.info/beginnerschinese/learnchinesegrammar.html - (ஆங்கிலத்தில்) - சீன மொழி - அறிமுகம்
- http://www.zapchinese.com/Chinese-lessons/Lesson08/Lesson08.htm - (ஆங்கிலத்தில்) - சீன மொழி எழுதுதல் - கீற்றுக்கோடுகள் இடும் முறை
- http://www.geocities.com/Tokyo/Palace/1757/scrittura/scrittura.htm - (ஆங்கிலத்தில்) - சீன மொழி எழுதுதல் - வேர்க்குறியீடுகள்
- http://www.bbc.co.uk/languages/chinese/real_chinese/ - பிபிசி மொழிப் பயிற்சி
- http://www.chinese-outpost.com/language/default.asp Free Beginner's 'Introduction to Mandarin' Tutorial
- http://www.sacu.org/langchindex.html Basic Chinese
- http://www.adsotate.com/textbook/?q=taxonomy/term/1 Readings with hover support
- http://www.chineselearner.com/writing/strokes/stroke-examples3.html Chinese Learner Learn Mandarin Chinese Online Free