விஜேந்தர் குமார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விஜேந்தர் குமார் | |
| பிறப்பு | அக்டோபர் 29, 1985 கலுவாஸ், அரியானா |
|---|---|
| தேசியம் | இந்தியர் |
| குடியுரிமை | இந்தியர் |
| பணி | குத்துச்சண்டையாளர், நடு எடை பிரிவு |
| உயரம் | 182 cm (6) |
விஜேந்தர் குமார் சிங் பெனிவால் (இந்தி: विजेन्द्र सिंह बेनीवाल) ஓர் இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர் ஆவார். பெய்ஜிங்கில் நடைபெறும் 2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இந்திய ஒலிம்பிக் அணியை சேர்ந்த விஜேந்தர் நடு எடை பிரிவுப் (middleweight) போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.இந்த விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை உடையவர்.இந்த வெற்றியை பாராட்டி ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் பெற்றார்.2009ஆம் ஆண்டு நடந்த உலக தொழில்முறையல்லாத குத்துச்சண்டை சாதனைப்போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.குவாங்சோ ஆசிய விளையாட்டுக்களில் 75கி குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.