காரல் ஜெராசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரல் ஜெராசி
பிறப்பு(1923-10-29)அக்டோபர் 29, 1923
வியன்னா, ஆஸ்திரியா
இறப்புசனவரி 30, 2015(2015-01-30) (அகவை 91)
சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்பல்கேரியர், ஆஸ்திரியர், அமெரிக்கர்
துறைவேதியியல்
அறியப்படுவதுSynthesis of norethisterone, the first orally highly active progestin used in one of the first three oral contraceptive pills

காரல் ஜெராசி (Carl Djerassi அக்டோபர் 29, 1923—சனவரி 30, 2015) என்பவர் அறிவியல் அறிஞர், நூலாசிரியர், புதின நாடக எழுத்தாளர், எனப் பன்முகம் கொண்டவர். குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் கருத்தடை மாத்திரைகளைத் தம் ஆராய்ச்சி மூலம் உருவாக்கினார்[1] .

பிறப்பும் கல்வியும்[தொகு]

இவருடைய பெற்றோர் இருவரும் மருத்துவர்கள். ஆத்திரியா நாட்டின் வியன்னாவில் உள்ள பள்ளிகளில் தொடக்கக் கல்வியைப் படித்தார். தமது பதினாறாம் வயதில் அமெரிக்காவுக்கு வந்தார். மிசூரியில் உள்ள கல்லூரியில் வேதியியல் பயின்று பட்டம் பெற்றார் ஒக்கியோவில் உள்ள கென்யான் கல்லூரியில் படித்தார்.

பணிகள்[தொகு]

காரல் ஜெராசி தலைமையில் ஒரு ஆய்வுக் குழு 1951 இல் நாரத் ரின்ரோ ன் என்னும் மூலக் கூறு ஒன்றைக் கண்டுபிடித்தது. இதனை கண்டுபிடித்தபோது அவருக்கு அகவை 28. அம்மூலக் கூறு அடிப்படையாகக் கொண்டு குடும்பக் கட்டுப்பாட்டுக்குத் தேவையான மாத்திரைகளை காரல் ஜெராசி உருவாக்கினார், தம் வாழ்க்கை முழுதும் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டார். வேதியியல் நிறுவனங்களிலும் மருந்துகள் உருவாக்கும் குழுமங்களிலும் காரல் ஜெராசி வேலை செய்தார். உலகப் புகழ் பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக் கழக வேதியியல் துறையின் மதிப்புமிகு பேராசிரியராக இருந்தார் கரிம வேதியியல் துறைக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார் 1200 ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் புதினங்கள், நாடகங்கள் ஆகியன படைத்துள்ளார். இவருடைய தன் வரலாறு 4 மடலங்களில் எழுதப் பட்டு வெளியாகியது. இவருடைய அருஞ்சாதனைகளைப் பாராட்டி பல அமைப்புகள் விருதுகள் இவருக்கு வழங்கின.

மேற்கோள்கள்[தொகு]

  1. Robert D. McFadden (January 31, 2015). "Carl Djerassi, 91, a Creator of the Birth Control Pill, Dies". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2015/02/01/us/carl-djerassi-dies-at-91-forever-altered-reproductive-practices-as-a-creator-of-the-pill.html. பார்த்த நாள்: January 31, 2015. "Carl Djerassi, an eminent chemist who 63 years ago synthesized a hormone that changed the world by creating the key ingredient for the oral contraceptive known as 'the pill,' died at his home in San Francisco on Friday. He was 91. His son, Dale, said the cause was complications of liver and bone cancer...." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரல்_ஜெராசி&oldid=2761310" இலிருந்து மீள்விக்கப்பட்டது