டேவிட் பென்-குரியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டேவிட் பென்-குரியன்
|
|
|
1st இஸ்ரேல் பிரதமர்
|
|
|---|---|
| பதவியில் 2 நவமொஅர் 1955 – 21 ஜூன் 1963 |
|
| முன்னவர் | மோஷே ஷாரெட் |
| பின்வந்தவர் | லேவி எஷ்கோல் |
| பதவியில் 14 மே 1948 – 7 டிசம்பர் 1953 |
|
| முன்னவர் | இல்லை |
| பின்வந்தவர் | மோஷே ஷாரெட் |
| அரசியல் கட்சி | Mapai, ராஃபி, தேசியப் பட்டியல் |
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 16, 1886 Płońsk, போலந்து (ரஷ்யப் பேரரசு) |
| இறப்பு | திசம்பர் 1 1973 (அகவை 87) இஸ்ரேல் |
டேவிட் பென்-குரியன் (16 அக்டோபர் 1886 - 1 டிசம்பர் 1973) இஸ்ரேலின் முதல் பிரதமர் ஆவார். மிக இளம் வயதிலேயே சியோனிசத்தின் மீது இவருக்கு இருந்த பற்று, இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதில் இவரது பங்களிப்புக்கு முக்கிய காரணமாகும். 1948 ஆம் ஆண்டின் அரபு-இஸ்ரேலியப் போரில் இஸ்ரேலை வெற்றிப் பாதையில் வழி நடத்திய இவர், அரச நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கு உதவியதுடன், உலகம் முழுவதிலிருந்தும் யூதர்களை இஸ்ரேலுக்குக் கொண்டு வருவதையும் மேற்பார்வை செய்தார். 1970 ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பென்-குரியன் சிடே போக்கர் (Sde Boker) என்னும் பாலைவனப் பகுதியில் குடியேறி இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார். இவர் இறந்த பின்னர், "டைம்" இதழ் இந் நூற்றாண்டின் முக்கிய 100 பேர்களுள் ஒருவராக இவரையும் தெரிவு செய்தது.