ஜோசப் கோயபெல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோசப் கோயபெல்ஸ்


ஜெர்மன் வேந்தர் (ரெய்க் ஜெர்மன்)
பதவியில்
30 ஏப்ரல் – 1 மே 1945
குடியரசுத் தலைவர் கார்ல் டொனிட்ஸ்
முன்னவர் அடால்ப் இட்லர்
பின்வந்தவர் யாரும் நியமிக்கப்படவில்லை (லுட்ஸ் கிராப் ஷிவரின் வோன் க்ரோசிக் என்பவரே தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார்)

ரெய்க் அமைச்சரவையின், மனிதவளமேம்பாடு மற்றும் கொள்கைப்பரப்பு அமைச்சர்
பதவியில்
13 மார்ச் 1933 – 30 ஏப்ரல் 1945
முன்னவர் பதவி அறிமுகப்படுத்தப் படவில்லை
பின்வந்தவர் வெர்னர் நவ்மென்
அரசியல் கட்சி தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சிNational (NSDAP)

பிறப்பு அக்டோபர் 29, 1897(1897-10-29)


ரெய்ட், புருஷ்யா, ஜெர்மனி

இறப்பு மே 1 1945 (அகவை 47)
பெர்லின், நாசி ஜெர்மனி
வாழ்க்கைத்
துணை
மகதா கோயபெல்ஸ்
பழைய மாணவர் போன் கல்கலைக்கழகம்
ஊர்ஸ்பெர்க் பல்கலைக்கழகம்
பிரெய்பெர்க் பல்கலைக்கழகம்
எய்டல்பெர்க் பல்கலைக்கழகம்
தொழில் அரசியல்வாதி
கையொப்பம் ஜோசப் கோயபெல்ஸ்'s signature

பால் ஜோசப் கோயபெல்ஸ் (Paul Joseph Goebbels) (29 அக்டோபர் , 18971 மே , 1945)ஜெர்மனின் மிக முக்கிய அரசியல்வாதியும் , அடால்ப் இட்லரின் மிக நெருக்கமானவர்களில் ஒருவராக விளங்கிய இவர் 1933 முதல் 1945 வரையுள்ள காலத்தில் ஜெர்மன் ரெய்க் அமைச்சரவையின் மனிதவள மேம்பாடு மற்றும் கொள்கைப்பரப்பு அமைச்சராக பதவி வகித்தவர். இவர் 1921 ல் ஏடல்பெர்க் பல்கலைக்கழகத்தில் 18 ம் நூற்றாண்டின் நாடகக் கதைகளை ஆய்வறிந்ததின் வாயிலாக முனைவர் பட்டம் பெற்றவர். இவரின் யூதபகைமையை தன் உணர்ச்சிமிகு பேச்சாற்றலின் மூலம் ஜெர்மனிக்கு உணர்த்தியதன் விளைவாக இவர் அறியப்படுகிறார். இவரின் யூதபகைமைக்குச் சான்றாக கிரிஸ்டல்நாக்ட் (கிரிஸ்டல் நைட்-Crystal Night) கொடூரச்சம்பவம் குறிப்பிடப்படுகிறது. இவர் பல நாவல்களையும், நாடகங்களையும் எழுதியுள்ளார். ஆனால் அவற்றை வெளியிட எந்த பதிப்பகத்தாறும் முன் வரவில்லை. இவரின் கருத்துக்கள் பொதுவுடமைவாதிகளையும், சோசலிசவாதிகளையும் எதிர்ப்பதற்காகவும், ஸ்ட்ரோமப்டேலுங் எஸ் ஏ அமைப்பினரை ஆதரிப்பதாகவும் அமைந்தது. 1923 ல் நாசி அரசியலில் நுழைந்த இவர் 1928 களில் மிக உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவராக மதிக்கப்பட்டார். அதன் பின் 1933 ல் இட்லர் அரசு பதவியில் அமர்ந்தபொழுது கொள்கைப்பரப்பு அமைச்சராக பதவியில் அமர்ந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர் பலரை யுத்தத்தில் பங்குபெற வைத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. 1943 ம் ஆண்டில் அச்சு நாடுகளுக்கு எதிராக உலகநாடுகள் திரும்புகையில் இவர் தலையீட்டால் ஜெர்மானியரை தன் பரப்புரை மூலம் அவர்களை எதிர்க்கும் படி ஒன்று திரட்டினார் என்று கூறப்படுகிறது. இட்லரின் இறுதி நாட்களில் அவர் இறக்கும் வரை உடனிருந்தவர் அவருக்குப்பின் இவரை அதிகாரப்பூர்வ வேந்தராக இட்லர் அறிவித்துவிட்டு இறந்தார். அவர் இறந்தபின் கோயபெல்ஸ் 1 மே, 1945 அன்று தன் மனைவி மகதா மற்றும் ஆறு குழந்தைகளுடன் தற்கொலைப்புரிந்து இறந்தார். இவர் இறப்பு பற்றி பலவிதங்களில் பேசப்படுகிறது முதலில் ஆறு குழந்தைகளுக்கும் மார்பின் என்ற மயக்கமருந்து கொடுக்கப்பட்டு பின் அவர்களுக்கு சயனைட் நஞ்சை அவர்களின் வாயில் அவர் மனைவி திணித்ததாகக் கூறப்படுகிறது பிறகு அவர் மனைவி சயனைட் நஞ்சை உட்கொண்டார் எனவும் கோயபெல்ஸ் இட்லரைப் போல் துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலைப்புரிந்துகொண்டார் எனவும் பல்வேறு நிச்சயமற்றத்தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ் எஸ் காவலரை சுடச்சொல்லி ஆணையிட்டு, அக்காவலர் சுட்டப்பின் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களின் இறப்பின் மர்மத்தைத் தழுவி டவுன்பால் (Downfall)என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_கோயபெல்ஸ்&oldid=1085327" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்