மாதுலுவாவே சோபித்த தேரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதுலுவாவே சோபித்த தேரர்
Maduluwawe Sobitha Thero
வண. மாதுலுவாவே சோபித்த தேரர் (2015)
பதவிகோட்டே நாக விகாரையின் விகாராதிபதி
சுய தரவுகள்
பிறப்பு
பத்திர தேவாகே இரத்தினசேகரா

(1942-05-29)29 மே 1942
பாதுக்கை, இலங்கை
இறப்பு8 நவம்பர் 2015(2015-11-08) (அகவை 73)
சமயம்பௌத்தம்
தேசியம்இலங்கையர்
பெற்றோர்(s)பத்திர தேவாகே அப்புகாமி,
கரலினகாமி
பாடசாலைதேரவாத பௌத்தம்
தர்மா பெயர்(கள்)வண. மாதுலுவாவே சோபித்த தேரர்
கோயில்நாக விகாரை, சிறீ ஜெயவர்தனபுர கோட்டை

மாதுலுவாவே சோபித்த தேரர் (Maduluwawe Sobitha Thero, சிங்களம்: මාදුළුවාවේ සෝභිත හිමි; 29 மே 1942 - 8 நவம்பர் 2015) சிங்கள பௌத்த பிக்கு ஆவார். இவர் இலங்கை கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும் ஆவார்.[1][2][3][4]

2015 சனவரியில் மகிந்த ராசபக்ச அரசைப் பதவியில் இருந்து அகற்ற இவர் முக்கிய பங்காற்றினார். 2015 சனவரி அரசுத் தலைவர் தேர்தலில் ராசபக்சவிற்கு எதிராக எதிரணிக் கூட்டு வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சோபித தேரர் தனது 13வது அகவையில் பௌத்த விகாரை வாழ்வைத் தொடங்கினார்.[5] 1962 ஆம் ஆண்டில் பௌத்த குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.[5]

மறைவு[தொகு]

சுகவீனம் காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சோபித்த தேரர் 2015 நவம்பர் 8 அன்று காலமானார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Raine Wickrematunge (21 May 2013). And Then They Came for Me: The Lasantha Wickrematunge Story. AuthorHouse. பக். 182–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4817-8991-2. http://books.google.com/books?id=NEVJWr8Vpz0C&pg=PA182. 
  2. "Sobhitha Thero suspects moves to stop him". BBC. 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.
  3. "I'm prepared to be the common candidate at presidential election – says Ven. Maduluwawe Sobitha Thero". lankafirst.lk. Archived from the original on 23 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 23 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. T. D. S. A. Dissanayaka (1994). The politics of Sri Lanka. Swastika (Private) Ltd.. பக். 335. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-955-572-001-4. http://books.google.com/books?id=x2VuAAAAMAAJ. 
  5. 5.0 5.1 "People's monk dead". 9 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Ven. ​Maduluwawe Sobhitha Thera passes away". டெய்லி மிரர். 8 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2015. {{cite web}}: zero width space character in |title= at position 6 (help)