வர்கீஸ் குரியன்
வர்கீஸ் குரியன் ( நவம்பர் 26, 1921- செப்டம்பர் 09, 2012[1], கோழிக்கோடு, கேரளம்) இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார். இந்தியாவின் பால்காரர் என்றும் கூறுவதுண்டு.
குசராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு (GCMMF) தலைவராக இருந்தவர். அமுல் என்ற வணிகச்சின்னத்துடன் விற்கப்படும் உணவுப்பொருட்களை நிர்வகிக்கும் ஓர் உயர்நிலை கூட்டுறவு இயக்கமே குசராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பாகும். 2006-07 ஆண்டிற்கான வருவாய் அமெரிக்க $ 1 பில்லியன் ஆகும்.
உலகின் மிகப்பெரிய பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டமான வெள்ளச் செயலாக்கத்தின் வடிவமைப்பாளராக குரியன் கருதப்படுகிறார். ஆனந்த் மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால்பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவிய குரியன் இந்தியாவின் வெண்புரட்சியை வழி நடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார்.
பொருளடக்கம் |
கல்வி [தொகு]
குரியன் சென்னை லயோலாக் கல்லூரியில் 1940ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார். 1946ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். பின்னர் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் படித்து இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்புநிலையில் பெற்றார்.
பணிவாழ்வு [தொகு]
இந்தியா வந்தபிறகு, மே 1949ஆம் ஆண்டு ஆனந்த் அரசு பால்பண்ணையில் பொறியாளராகச் சேர்ந்தார். அதேநேரம் புதியதாகத் துவங்கப்பட்ட கூட்டுறவு பால்பண்ணை , கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தனியாரிடமிருந்த பொல்சன் பண்ணையுடன் போட்டியிட்டு தோற்றுக் கொண்டிருந்தது. அரசுப் பணியில் சவால்களில்லாமல் வெறுத்திருந்த குரியனுக்கு இது ஓர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. கைரா பால் சங்கத் தலைவர் திரிபுவன்தாஸ் படேலிடம் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவிட உதவுவதாகக் கூறினார். இதுவே அமுல் பிறக்க வழி வகுத்தது.
விருதுகள் [தொகு]
பால்பண்ணை மேம்பாட்டிற்காக குரியனுக்கு இந்தியாவில் மட்டுமன்றி பிற நாடுகளிலும் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
- 1963 ரமன் மக்சேசே பரிசு சமூக தலைமைக்காக [2].
- 1965 பத்மசிறீ
- 1966 பத்ம பூசண்
- 1986 கிருஷி ரத்னா விருது (இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து)
- 1986 வாடேலர் அமைதிப் பரிசு (கார்னெகி நிறுவனம்)
- 1989 உலக உணவுப் பரிசு
- 1993 ஆண்டின் பன்னாட்டு மனிதர் - உலக பால்பண்ணை கண்காட்சி, மாடிசன், ஐக்கிய அமெரிக்கா
- 1999 பத்ம விபூசண்
- 2007, கரம்வீர் புரஸ்கார்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "வெண்மை புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் காலமானார்". தினகரன் (10/09/2012). பார்த்த நாள் செப்டம்பர் 10, 2012.
- ↑ Ramon Magsaysay Award Citation Ramon Magsaysay Award Official website.
வெளியிணைப்புகள் [தொகு]
- amul.com
- THE AMUL SAGA by Verghese Kurien
- Dr. Kurien, 1989 World Food Prize Laureate
- http://www.ashoka.ca/fellows/social_entrepreneur.cfm
- Resignations
- "'Milkman' of India quits 'Taste of India'". The Times of India. 21 March 2006. http://timesofindia.indiatimes.com/articleshow/msid-1457538,prtpage-1.cms.
- P.C. Mathew (4 September 2006). "Address the fears Kurien has voiced". The Hindu. http://www.hindu.com/thehindu/op/2006/04/09/stories/2006040900681800.htm.