வி. சாந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மருத்துவர் வி. சாந்தா (Dr. V. Shanta, பிறப்பு: மார்ச் 11, 1927) இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு புற்றுநோய் மருத்துவ நிபுணர். இவர் சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் மக்சேசே விருது, பத்மசிறீ போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

அடையாறு புற்றுநோய்க் கழகத்தில் 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சென்னையில் மைலாப்பூரில் பிறந்தவர் சாந்தா. பி.எஸ்.சிவசாமி பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் 1949 இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955 இல் எம்.டி பட்டம் பெற்றார்.

படைப்புக்கள்[தொகு]

  • My Journey, Memories, V Shanta,தமிழில் திரு பத்மநாராயணனால் மொழிபெயர்க்கப்பட்டது[1]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/books/books-reviews/the-emperor-can-be-killed/article4428898.ece
  2. Nayudamma award for Dr. Shanta, த இந்து, பெப்ரவரி 20, 2011
  3. தமிழ்நாடு அரசின் செய்திவெளியீடு எண்:150, நாள்: 07-03-2013

வெளி இணைப்புகள்[தொகு]

  • Interview with Dr Shanta - Frontline Volume 22 - Issue 17, Aug 13 - 26, 2005[1]
  • The 2005 Ramon Magsaysay Award for Public Service-CITATION for Dr V. Shanta [2]
"http://ta.wikipedia.org/w/index.php?title=வி._சாந்தா&oldid=1576029" இருந்து மீள்விக்கப்பட்டது