மரியோ மிராண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மரியோ மிராண்டா (Mario Miranda, 1926-2011) இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஓர் ஓவியரும் கேலிச் சித்திரக்காரருமாவார். கோவா மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 85 ஆவது வயதில் டிசம்பர் 11 2011 இல் காலமானார்.

[தொகு] பிரபல பாத்திரப் படைப்புகள்

இவரின் 'மிஸ் நிம்புபானி' மற்றும் 'புந்தல்தாஸ்' போன்ற கேலிச்சித்திரப் பாத்திரங்கள் மிகவும் பிரபலமானவை. கோவாவைப் பிரலப்படுத்திய படைப்புகள் இவரது கலைப்படைப்புகள் பெரும்பாலும் இவரது சொந்த மாநிலமான கோவாவை மையப்படுத்தி வரையப்பட்டிருந்தன. கோவா மக்களையும் அவர்களது பண்பாட்டையும் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கோவாவை பிரலப்படுத்த பெரிதும் உதவின. கோவாவின் நிலப்பரப்புகள், மக்களின் வாழ்க்கை, கலை, கலாசாரங்கள் போன்றவை இவரது படைப்புகளில் பெரிதும் வெளிப்பட்டன.

[தொகு] விருதுகள்

இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

[தொகு] மூலம்

பிரபல ஓவியர் மரியோ மிராண்டா காலமானார்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மரியோ_மிராண்டா&oldid=955607" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்