ராசேந்திர குமார் பச்சோரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ராசேந்திர கே.பச்சோரி | |
| பிறப்பு | ஆகத்து 20, 1940 நைனித்தால், உத்தராகண்ட், இந்தியா |
|---|---|
| தேசியம் | இந்தியர் |
| பணி | தலைவர், ஐ.பி.சி.சி. |
| சமயம் | இந்து |
ராசேந்திர குமார் பச்சோரி (Rajendra Kumar Pachauri, பிறப்பு: ஆகஸ்ட் 20, 1940) ஆற்றல் மற்றும் வள மூலங்களுக்கான நிறுவனத்தின் (TERI) தலைமை-நிர்வாகியாகவும், பருவநிலை மாறுதல்களுக்கான பன்னாட்டுக் குழுவின் (IPCC) தலைவராகவும் உள்ளார். மேலும் ஆற்றல் மற்றும் வளமூலங்களுக்கான நிறுவன டெரி பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.
2007 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பச்சோரி தலைமை-வகிக்கும் IPCC மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் துணைத்தலைவரான அல் கோருக்கு இணைந்து வழங்கப்பட்டது. அத்துடன் பதும விபூசன் விருது சனவரி 2008 இலும் பத்ம பூசன் விருது சனவரி 2001 இலும் பச்சோரிக்கு வழங்கப்பட்டது.
[தொகு] விருதுகளும் பெருமைகளும்
- Millenium Pioneer Award – World Renewable Energy Network – 2000.
- 2001 இல் பத்ம பூசன் - குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணனிடமிருந்து .
- "Officier de La Legion d'Honneur" - 2006 - பிரெஞ்சு தூதரிடமிருந்து.
- சவகர்லால் நேரு Birth Centenary Award – 2006.
- 20 டிசம்பர் 2007 - ஜப்பான், க்யோட்டோவிலுள்ள Ritsumeikan பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.
- NDTV Global Indian Award for the year 2007.
- 2007-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு IPCC மற்றும் அல் கோர் ஆகியோருக்கு.
- 2008 இல் பத்ம விபூசண் - குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடமிருந்து.
- 26 மே 2008 - அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.
- 6 ஜூன் 2008 - IIFA Global Leadership Awar.
- 17 ஜூலை 2008 - Doctor of Science, honoris causa - கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.