மோகன் பாகவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மோகன் பாகவத்
மோகன்ராவ் மதுகர்ராவ் பாகவத்
பிறப்பு 11 September 1950
சந்தரபூர், இந்தியா
பணி ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
சமயம் இந்து சமயம்

மோகன் பாகவத் (Mohan Madhukar Bhagawat, பிறப்பு: 1950) ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தற்போதைய பொதுச் செயலாளராவார். மருத்துவரான இவர் பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழுநேர தொண்டராக சேர்ந்தவர்.[1]

இளமைக்காலம்[தொகு]

மோகன்ராவ் மதுகர்ராவ் பாகவத் 1950ல் மகாராட்டிர மாநிலம், சந்தரபூர் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை மதுகர் பாகவத், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் சந்தரபூர் தலைவரும், குஜராத்தில் பிரச்சாரதாரராகவும் இருந்துள்ளார். மூன்று இளைய சகோதரர்களும், ஒரு இளைய சகோதரியும் இவருக்கு உள்ளார்கள். லோக்மானிய திலக் வித்யாலையத்தில் பள்ளி படிப்பையும் ஜனதா கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டமும் பெற்றவர். பஞ்சாப்ராவ் க்ரிஷி வித்யாபெத் கல்லூரியில் கால்நடை மருத்துவத்திலும். விலங்கு வளர்ப்புத் துறையிலும் பட்டம் பெற்றார். 1975ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போது ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் முழு நேரத் தொண்டராக தன்னை இணைத்துக் கொண்டார்.

பொது வாழ்வு[தொகு]

இந்திய நெருக்கடி நிலையில் பணியாற்றியப் பிறகு 1977ல் மகாராட்டிரம் மாநில அகோலா என்ற ஊரின் சங்க நிர்வாகியானார். மற்றும் நாக்பூர், விதர்பா போன்ற ஊர்களின் சங் நிர்வாகியாகவும் பணியாற்றினார். 1991 முதல் 1999 வரை நாடு முழுவதுமுள்ள ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இளைஞர் படையின் உடற்பயிற்சி பொறுப்பாளராகயிருந்தார். 2000ல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொது செயலாளராக இருந்த கே.எஸ்.சுதர்சன் உடல் நலக்குறைவால் பதவி விலகிய போது இவர் அதன் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

கொள்கை[தொகு]

இவரால் இந்துத்துவ கொள்கைகள் நவீன காலத்திற்கேற்ப முன்னிறுத்தப்படுகிறது.[2] வளமான மற்றும் பழைமையான இந்திய பாரம்பரிய மதிப்பை காப்பத்தில் முனைப்புக்காட்டுகிறார்.[3] தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதி இணைக்கத்தை வலியுறுத்துகிறார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mohan Bhagwat: A vet and RSS pracharak for over 30 years, 21 March 2009, Times of India, [1]
  2. RSS names Mohan Bhagwat its new chief: ‘pragmatist’ & friend of Advani, Sunday , March 22, 2009, Indian Express
  3. RSS evolves with changing times: Bhagwat, Sunday, November 20, 2005, Press Trust of India, Indian Express
  4. Root out discrimination in society, Monday, January 29, 2007, The Hindu [2]
  5. RSS cobbles caste unity

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_பாகவத்&oldid=1546203" இருந்து மீள்விக்கப்பட்டது