ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜனதா தளம் (மதசார்பற்ற) | |
|---|---|
| தலைவர் | எச்.டி. தேவெ கவுடா |
| நிறுவல் | ஏப்ரல் 6, 1999 |
| தலைமையகம் | காந்திநகர், பெங்களூரு |
| கூட்டணி | மூன்றாம் அணி (2009) யூபிஏ (2009-நடப்பு) |
| கொள்கை நிலை | சமூகநீதி சனநாயகம் சமயச் சார்பின்மை |
| வலைத்தளம் | www.janatadalsecular.org.in |
|
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க |
|
ஜனதா தளம் (மதசார்பற்ற) அல்லது மத சார்பற்ற ஜனதா தளம் (Janata Dal (Secular)) முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கௌடாவின் தலைமையில் இயங்கும் நடு-இடது கொள்கையுடைய ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். [1] இந்தக் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாக கருநாடக மாநிலத்திலும் கேரள மாநிலத்திலும் அங்கீகரித்துள்ளது. சூலை 1999ஆம் ஆண்டில் ஜனதா தளம் பிளவுபட்டு இந்தக் கட்சி உருவானது. [2][3]
இந்தக் கட்சியில் உள்ள குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் எச். டி. குமாரசாமி (முன்னாள் கர்நாடக முதலமைச்சர் மற்றும் கர்நாடக மாநில அமைப்பின் தலைவர்), எம். பி. வீரேந்திர குமார் (நாடாளுமன்ற உறுப்பினரும் கேரள மாநில அமைப்பின் தலைவரும்) , எஸ். பங்காரப்பா (முன்னாள் கர்நாடக முதலமைச்சர், எச்.டி.ரேவண்ணா ஆகியோர் ஆவர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "History of Janata Dal (Secular) according to its website". பார்த்த நாள் 2007-09-30.
- ↑ "EC to hear Janata Dal symbol dispute". பார்த்த நாள் 2007-09-30.
- ↑ "The Nation:Janata Dal:Divided Gains (India Today article)". பார்த்த நாள் 2007-09-30.