இந்தியத் தேர்தல் ஆணையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய தேர்தல் ஆணையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| இந்தியக் குடியரசு |
|---|
| இந்திய அரசு வலைவாசல் |
இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மாநில சட்டப்பேரவைகள், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இயக்கவும் மேற்பார்வையிடவும், நடத்தவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பெயராண்மைச் சட்டம், 1950 (Representation of People Act, 1950) ஆகும்.
தலைமைத் தேர்தல் ஆணையர்கள்[தொகு]
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் பட்டியல்[1] :
| வரிசை எண் | தேர்தல் ஆணையர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
|---|---|---|---|
| 1 | சுகுமார் சென் ஐ சி எஸ் (பி.1899) | மார்ச் 21, 1950 | டிசம்பர் 19, 1958 |
| 2 | கே.வி.கே. சுந்தரம் | டிசம்பர் 20, 1958 | செப்டம்பர் 30, 1967 |
| 3 | எஸ்.பி. சென் வர்மா | அக்டோபர் 1, 1967 | செப்டம்பர் 30, 1972 |
| 4 | நாகேந்திர சிங் | அக்டோபர் 1, 1972 | பெப்ரவரி 6, 1973 |
| 5 | டி. சுவாமி நாதன் | பெப்ரவரி 7, 1973 | ஜூன் 17, 1977 |
| 6 | எஸ்.எல். சக்தார் | ஜூன் 18, 1977 | ஜூன் 17, 1982 |
| 7 | ஆர்.கே. திரிவேதி | ஜூன் 18, 1982 | டிசம்பர் 31, 1985 |
| 8 | ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி | ஜனவரி 1, 1986 | நவம்பர் 25, 1990 |
| 9 | வி.எஸ். ரமாதேவி | நவம்பர் 26, 1990 | டிசம்பர் 11, 1990 |
| 10 | டி.என். சேசன் | டிசம்பர் 12, 1990 | டிசம்பர் 11, 1996 |
| 11 | எம்.எஸ். கில் | டிசம்பர் 12, 1996 | ஜூன் 13, 2001 |
| 12 | ஜே.எம். லிங்டோ | ஜூன் 14, 2001 | பெப்ரவரி 7, 2004 |
| 13 | டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி | பெப்ரவரி 8, 2004 | மே 15, 2005 |
| 14 | பி.பி. தாண்டன் | மே 16, 2005 | ஜூன் 29, 2006 |
| 15 | என். கோபாலசுவாமி | ஜூன் 29, 2006 | ஏப்ரல் 20, 2009 |
| 16 | நவின் சாவ்லா[2][3] | ஏப்ரல் 20, 2009 | ஜூலை 29, 2010 |
| 17 | எஸ்.ஒய். குரைசி | ஜூலை 30, 2010 | தற்போது பணியில் |
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள்". இந்தியத் தேர்தல் ஆணையம்.
- ↑ http://www.indian-elections.com/chief-election-commissioner.html
- ↑ http://www.indianexpress.com/news/navin-chawla-takes-over-as-cec-on-tue/449165/ |இந்தியன் எக்சுபிரசில் வந்த செய்தி