இந்திய ரிசர்வ் வங்கி
| இந்திய ரிசர்வ் வங்கி भारतीय रिज़र्व बैंक Reserve Bank of India |
|||
|
|||
| தலைமையகம் | |||
|---|---|---|---|
| ஆரம்பம் | ஏப்ரல் 1, 1935 | ||
| ஆளுனர் | துவ்வூரி சுப்பராவ் | ||
| மத்திய வங்கி | |||
| நாணயம் | இந்திய ரூபாய் | ||
| ISO 4217 Code | INR | ||
| Base borrowing rate | 5.2 | ||
| Base deposit rate | 9.5 | ||
| வலைத்தளம் | http://www.rbi.org.in | ||
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது. பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜன்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றை கண்காணித்தும் வருகிறது. இந்திய நாட்டின் நாணய மதிப்பு( அந்நிய செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937 ம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டார கிளைகள் உள்ளன. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் துவ்வூரி சுப்பராவ் ஆவார்.
பொருளடக்கம் |
[தொகு] முதன்மைச் செயல்பாடுகள்
- நாணயஞ் சார்ந்த அதிகாரம்
- தேசிய நிதிக்கொள்கையை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்
- வங்கிகளின் பணக்கையிருப்பு விகிதம் முறைப்படுத்துதல்
- நிதிசார் துறைகளை முறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடல்
- பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிதி சார்ந்த கோட்பாடுகளை வரையறுத்தல்
- அன்னியச் செலாவணியை முறைப்படுத்துதல்
- அன்னியச் செலாவணி முறைப்படுத்துதல் சட்டம், 1999 தின் படி முறைப்படுத்துதல்
- இந்திய ரூபாய் நாணயம் அச்சிடுதல்
- இந்திய ரூபாய் நாணயம் மற்றும் தாள் அச்சிடுதல், பழைய தாள்களை புதிய தாள்களுக்கு பரிமாற்றம் செய்தல், பழைய தாள்களை அழித்தல்
- தேசிய முன்னேற்றத்தில் பங்கு
- இதர பணிகள்
- மத்திய மாநில அரசுகளின் முதன்மை வங்கியாக செயல்படல்.
[தொகு] வெளியீடு துறை
இது ரிச்ர்வ் வங்கியின் ஒரு பிரிவாகும். நாணயங்களைப் பொது மக்கள் புழக்கத்திற்காக வங்கிகள் மற்றும் அரசாங்கக் கருவூலங்கள் வழியாக வெளியிடும் துறையாகும்.
[தொகு] அட்டவணை வங்கிகள்
பொது மக்கள் நடத்தும் வங்கிகளை மேல்பார்வையிடும் பொறுப்பும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு உண்டு. தகுதியானவை என்று தனக்குத் தோன்றும் வங்கிகளைத் தனது ஆட்சிக்கு உரியவையாக அமைத்துக் கொள்ளும். அவ்வாறு அமைத்துக் கொண்ட வங்கிகள் ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் அட்டவணையில் காணப்படும். அவையே அட்டவணை வங்கிகள் எனப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள் இத்தகைய வங்கிகளைக் கட்டுப்படுத்தும்.
[தொகு] அட்டவணையில்லா வங்கிகள்
இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையில் சேர்க்கப்படாத வங்கிகள் அட்டவணையில்லா வங்கிகள் ஆகும். இவை மக்களால் மதிக்கப்பட்டதாகவும் தகுதி மிக்கதாகவும் இருந்தாலும் இவை அட்டவணையில் சேர்க்கப்பட்ட பிறகே அட்டவணை வங்கிகள் பட்டியலில் இடம் பெறும். ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்கள் இவ்வங்கிகளையும் கட்டுப்படுத்தும்.