நாணயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உலகின் சில நாணயங்கள்.

நாணயம் என்பது பொருட்களையும் சேவைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" ஆகும். பணம் என்பது ஒரு பரிமாற்ற ஊடகமும், பெறுமானத்தைத் தன்னுள் அடக்கியுள்ள ஒன்றும் ஆகையால், நாணயமும் பணத்தின் ஒரு வடிவம் ஆகும். நாணயம் என்பது நாணயத்தாள், உலோக நாணயம் (நாணயக் குற்றி) என்னும் இரண்டு வடிவங்களில் உள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு நாடும் தனது நாணயத்தின் உற்பத்தியிலும் வழங்கலிலும் தனியுரிமை கொண்டுள்ளன. இவ்வாறு வெவ்வேறு நாணயங்களைக் கொண்ட நாடுகளிடையே வணிகத்துக்கு உதவுவதற்காக நாணய மாற்று விகிதங்கள் உள்ளன. இவ்விகிதங்கள் ஒரு குறிப்பிட்ட நாணயம் பிற நாணயங்களுக்கு எதிராக என்ன பெறுமதியைக் கொண்டுள்ளது என்பதை முடிவு செய்ய உதவுகிறது. நாணயங்கள் அவை பயன்படுத்தும் நாணய மாற்றுவிகித முறையைப் பொறுத்து இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, மிதக்கும் நாணயங்கள், நிலைத்த நாணயங்கள் என்பனவாகும். தமது நாணயங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள நாடுகள் அதனை மத்திய வங்கிகள் மூலமாகவோ அல்லது நிதி அமைச்சகங்கள் மூலமாகவோ செயற்படுத்துகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாணயம்&oldid=1352016" இருந்து மீள்விக்கப்பட்டது