சிவ சேனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவசேனா (சிவசேனை) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். சிவ சேனா என்பது சிவாவின் படைகள் என்னும் பொருள்படும். இங்கே சிவா என்பது மராட்டிய மன்னனும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவனுமான சிவாஜியைக் குறிக்கிறது. இந்துக் கடவுளான சிவனை அல்ல. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் பலமாக உள்ள கட்சியாகும். ஜூன் 19 1966 அன்று பால் தாக்கரேவால் தோற்றுவிக்கப்பட்டது. இவரே இதன் தலைவரும் ஆவார். மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கட்சி தொடக்க காலத்தில் தென் இந்தியர்களுக்கு எதிராக மும்பை நகரில் நடந்த பல கலவரங்களுக்கு காரணமாக இருந்தது.
பின் இந்துத்துவ கொள்கைகளுக்கு மாறிய இக்கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் தேர்தல் சின்னம் வில் - அம்பு ஆகும்.