பி. டி. ராஜன்
| சர் பி. டி. ராஜன் | |
P. T. Rajan in 1934 |
|
|
கம்பம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
|
|
|---|---|
| பதவியில் 1952 – 1957 |
|
| ஆளுநர் | ஸ்ரீ பிரகாசா ஏ. ஜே. ஜான் அன்னபரம்பில் |
|
|
|
| பதவியில் April 4, 1936 – August 24, 1936 |
|
| ஆளுநர் | எர்ஸ்கைன் பிரபு |
| முன்னவர் | பொபிலி அரசர் |
| பின்வந்தவர் | பொபிலி அரசர் |
|
சென்னை மாகாண பொதுப்பணித்துறை அமைச்சர்
|
|
| பதவியில் 1930 – 1937 |
|
| ஆளுநர் | எர்ஸ்கைன் பிரபு |
| பின்வந்தவர் | பி. கலீஃபுல்லா |
| அரசியல் கட்சி | நீதிக்கட்சி |
|
|
|
| பிறப்பு | 1892 மதுரை மாவட்டம் |
| இறப்பு | 1974 |
| தேசியம் | இந்தியர் |
| பழைய மாணவர் | லேய்ஸ் பள்ளி, கேம்பிரிச், ஜீசஸ் கல்லூரி, ஆக்சுபோர்டு |
| துறை | வழக்கறிஞர் |
| சமயம் | இந்து |
பி. டி. ராஜன் என்றழைக்கப்பட்ட பொன்னம்பல தியாக ராஜன் (1892 – 1974) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார்.[1][2] ஆக்சுபோர்டு மற்றும் கேம்பிரிச் பல்கலைகழகங்களில் சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்ற பி. டி. ராஜன் 1920 சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 வரை சட்டமன்ற உறுப்பினராக நீடித்தார். 1932-37 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். முதல்வராக இருந்த பொபிலி அரசர் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சென்னை மாகாணத்தின் தற்காலிக முதல்வராகவும் பதவி வகித்தார். 1944 இல் பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்தில் இணைய மறுத்து விட்டார். 1944 முதல் பி. டி. ராஜனின் தலைமையில் நீதிக்கட்சி என்ற பெயரில் ஒரு கட்சி செயல்பட்டு வந்தது. 1952 சட்டமன்றத் தேர்தலில் ராஜனின் தலைமையில் பதினான்கு இடங்களில் போட்டியிட்டது. இத்தேர்தலில் ராஜன் மட்டும் கம்பம் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். 1957 சட்டமன்றத் தேர்தலில் உத்தமபாளையம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் அவர் தேர்தல்களில் பங்கேற்கவில்லை. பி. டி. ராஜன் 1974 இல் மரணமடைந்தார். இவரது மகன் பி. டி. ஆர். பழனிவேல்ராஜன் பின்னாளில் தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் பணியாற்றினார்.[3][4][5][6]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Provinces of British India". World Statesmen. பார்த்த நாள் 2008-10-20.
- ↑ "List of Chief Ministers of Tamil Nadu". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2008-10-20.
- ↑ The Times of India Directory and Year Book, Including Who's who. Bennett, Coleman & Co.. 1977. p. 982.
- ↑ Marshall, Peter James (1996). The Cambridge Illustrated History of the British Empire. Cambridge University. p. 365. ISBN 0521002540, ISBN 9780521002547.
- ↑ Oxford University Calendar. University of Oxford. 1927. p. 802.
- ↑ Balasubramaniam, K. M. (1934). South Indian Celebrities Vol 1. Madras: Solden & Co..
|
||||||||||||||||||||||||||