அம்மா உணவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேலம் மாநகராட்சியில் அம்மா உணவகம்

அம்மா உணவகம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை,சென்னை மாநகராட்சி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள் மூலமாக இயங்கும் மலிவு விலை உணவகத்திற்கு இடப்பட்டுள்ள பெயராகும். இது சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திறக்கப்பட்டுள்ளது.

மலிவு விலை உணவகங்கள்[தொகு]

அம்மா உணவகம் ஒன்றின் முன் வைக்கப்பட்டுள்ள விலைப்பட்டியல்

சென்னை மாநகராட்சியின் திட்டமான மலிவு விலை உணவகம் திட்டம் 2013 மார்ச் 19ஆம் நாள் சென்னை-சாந்தோமில் ஜெயலலிதாவால் தொடங்கப்பெற்றது. அதே நாளில் 15 இடங்களில் மலிவு விலை உணவங்கள் செயல்பாட்டிற்கு வந்தன. இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. [1]

பெயர் மாற்றம்[தொகு]

மலிவு விலை சிற்றுண்டி உணவகம் என்ற பெயரை 'அம்மா உணவகம்' என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் 2013 மார்ச் 23ம் தேதியில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மலிவு விலை உணவகங்களின் எண்ணிக்கை எழுபத்தி மூன்றாக (73) இருந்தன. [2]

திட்ட விரிவாக்கம்[தொகு]

சென்னை மாநகராட்சியின் சார்பில் நூற்றி இருபத்தி ஏழு (127) அம்மா உணவகங்களை ஜெயலலிதா திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சி காணொளிக் காட்சி முறையில் நடந்தது. [3] இதன் மூலம் அம்மா உணவங்களின் எண்ணிக்கை இருநூறாக (200) மாறியது. சென்னை மாநகராட்சியை தொடர்ந்து மற்ற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிபடுத்தப்படுமென சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்துள்ளார். [4] தமிழகத்தில் அமைந்துள்ளதுபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் மலிவு விலையில் உணவகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டிள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_உணவகம்&oldid=1819298" இருந்து மீள்விக்கப்பட்டது