கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
| சர் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு | |
1940-41 இல் ரெட்டி நாயுடு |
|
|
|
|
|---|---|
| பதவியில் ஏப்ரல் 1, 1937 – ஜூலை 14, 1937 |
|
| ஆளுநர் | எர்ஸ்கைன் பிரபு |
| முன்னவர் | பொபிலி அரசர் |
| பின்வந்தவர் | சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி |
|
சென்ன மாகாண ஆளுநர் (தற்காலிகம்)
|
|
| பதவியில் ஜூன் 18, 1936 – அக்டோபர் 1, 1936 |
|
|
இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்
|
|
| பதவியில் 1934 – 1937 |
|
| Governor–General | வில்லிங்க்டன் பிரபு லின்லித்கோ பிரபு |
|
|
|
| பதவியில் 1929 – 1932 |
|
| Monarch | ஐந்தாம் ஜார்ஜ் |
| Governor–General | ஹாலிஃபாக்ஸ் பிரபு வில்லிங்க்டன் பிரபு |
| முன்னவர் | வி. எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி |
| பின்வந்தவர் | குன்வர் மகாராஜ் சிங் |
|
வளர்ச்சித் துறை அமைச்சர், சென்னை மாகாணம்
|
|
| பதவியில் 1920 – 1923 |
|
| ஆளுநர் | வில்லிங்க்டன் பிரபு |
| பின்வந்தவர் | டி. என். சிவஞானம் பிள்ளை |
| அரசியல் கட்சி | நீதிக்கட்சி |
|
|
|
| பிறப்பு | 1875 |
| இறப்பு | 1942 |
| சமயம் | இந்து |
கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (தெலுங்கு:కూర్మా వేంకటరెడ్డి నాయుడు, ஆங்கிலம்:Kurma Venkata Reddy Naidu, 1875-1942) சென்னை மாகாணத்தின் முந்நாள் முதல்வரும் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார். 1919 இல் நீதிக்கட்சியில் இணைந்த நாயுடு 1920-23 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1929-32 இல் தென்னாப்பிரிக்காவிற்கான பிரிட்டிஷ் ஏஜன்டாகவும், 1934-37 இல் இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1936 சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கைன் பிரபு விடுப்பில் சென்ற போது அவருக்குப் பதிலாக தற்காலிக சென்னை ஆளுநராகப் பணியாற்றினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியமைக்க மறுத்ததால் ஏற்பட்ட இழுபறிநிலையின் போது மூன்று மாதங்கள் சென்னை மாகாணத்தின் இடைக்கால அரசின் முதல்வராகப் பதவி வகித்தார். 1940-42 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றினார்.[1][2][3][4][5][6]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Chief Ministers of Tamil Nadu since 1920". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2008-10-24.
- ↑ Ramanathan, K. V. (2008). The Satyamurti letters: the Indian freedom struggle through the eyes of a parliamentarian, Volume 1. Pearson Education India. pp. 301–5. ISBN 8131714888, ISBN 9788131714881. http://books.google.com/books?id=NY_XjIE6sVUC&pg=PA301.
- ↑ Menon, Visalakshi (2003). From movement to government: the Congress in the United Provinces, 1937-42. Sage. pp. 75. ISBN 0761996206, ISBN 9780761996200. http://books.google.com/books?id=UO-OxAoL4YIC&pg=PT38.
- ↑ Nagarajan, Krishnaswami (1989). Dr. Rajah Sir Muthiah Chettiar: a biography. Annamalai University. pp. 63–70. http://books.google.com/books?client=firefox-a&as_brr=0&id=0AMcAAAAIAAJ&dq=K.+V+Reddy+interim+Government+1937&q=erskine#search_anchor.
- ↑ Full text of "Rajah Sir Annamalai Chettiar Commemoration Volume"
- ↑ Rajaraman, P. (1988). The Justice Party: a historical perspective, 1916-37. Poompozhil Publishers. pp. 206-212. http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ.
|
||||||||||||||||||||||||||