ஓ. பன்னீர்செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓ. பன்னீர்செல்வம்

தமிழக நிதி அமைச்சர்
முன்னவர் ஜெ. ஜெயலலிதா
பின்வந்தவர் ஜெ. ஜெயலலிதா
தொகுதி போடிநாயக்கனூர்
அரசியல் கட்சி அதிமுக
கட்சி பொறுப்பு பொருளாளர்[1]

பிறப்பு ஜனவரி 1951
பெரியகுளம் தமிழ்நாடு
இருப்பிடம் சென்னை
தொழில் தமிழக நிதி அமைச்சர்.
தமிழக முன்னாள் முதல்வர்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்.

ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் தமிழக முதல்வர் ஆவார். இவர் அ. இ. அ. தி. மு. கழகத்தின் பொருளாளராக இருந்து வருகிறார். 1996 முதல் 2001 வரை தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக இருந்த இவர் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வருவாய்த்துறை அமைச்சராகப் பணியாற்றினார். செப்டம்பர் 21, 2001 முதல் மார்ச் 1, 2002 வரை தமிழக முதல்வர் பொறுப்பையும் அதைத் தொடர்ந்து மே 12, 2006 வரை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பையும் வகித்தார். மே 8, 2006 அன்று நடந்த தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த தமிழக சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்திருக்கிறார். அ. இ. அ. தி. மு. க-வின் சட்டமன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தற்போது 2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், அவை முன்னவராகவும் பதவி வகிக்கிறார்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Jayalalitha retains O Panneerselvam as AIADMK treasurer
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._பன்னீர்செல்வம்&oldid=1081750" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்