சுஜாதா (நடிகை)
| சுஜாதா | |
|---|---|
| பிறப்பு | திசம்பர் 10, 1952 இலங்கை |
| இறப்பு | ஏப்ரல் 6 2011 (அகவை 58) |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1968–2011[1] |
சுஜாதா (திசம்பர் 10, 1952 - ஏப்ரல் 6, 2011) தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், தெலுங்கும, மலையாளம், இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர்.
பொருளடக்கம் |
பிறப்பு [தொகு]
சுஜாதா, 1952-ம் ஆண்டில், டிசம்பர் 10-ந் தேதி, இலங்கையில் பிறந்தார். அவருடைய சொந்த ஊர், கேரள மாநிலம் காலே. அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தார்.
வாழ்க்கை [தொகு]
1977-ம் ஆண்டில் சுஜாதா, ஜெயகர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். திவ்யா, டாக்டருக்கு படித்து இருக்கிறார்
திரைப்படத்துறையில் [தொகு]
`போலீஸ் ஸ்டேஷன்' என்ற மலையாள நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். 1971-ம் ஆண்டில் டைரக்டர் ஜோஸ் பிரகாஷ், `தபஷ்னி' என்ற மலையாள படத்தில், சுஜாதாவை அறிமுகம் செய்தார். 1972-ம் ஆண்டில், கே. பாலசந்தர் இயக்கத்தில் `அவள் ஒரு தொடர்கதை' படத்தில் அறிமுகமானார். அந்த படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சுஜாதா தமிழ் பட உலகில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
நடித்த படங்கள் [தொகு]
- அவர்கள்,
- கடல் மீன்கள்,
- ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது,
- மயங்குகிறாள் ஒரு மாது,
- அமைதிப்படை,
- விதி,
- வில்லன்,
- நட்புக்காக,
- வரலாறு
- அந்தமான் காதலி
- பலப்பரீட்சை,
- பரீட்சைக்கு நேரமாச்சு
- உழைப்பாளி,
- பாபா
- தெலுங்கு, தமிழ், மலையாளர் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகி உள்ளிட்ட வேடங்களில் சுஜாதா நடித்துள்ளார்.
- `வரலாறு' படத்தில், அஜீத்குமாரின் அம்மாவாக நடித்து இருந்தார். அதுதான் அவர் நடித்த கடைசி படம். அதன்பிறகு சுஜாதா நடிக்கவில்லை.
சிறப்பு [தொகு]
- பட தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களுக்கு தொல்லை தராதவர்
- சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர்
மறைவு [தொகு]
இருதய நோயால் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. 6-4-2011 பிற்பகல் 2.30 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் மரணம் அடைந்தார்[2].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Sujatha, IMDb, http://www.imdb.com/name/nm0837674/, retrieved 2008-10-27
- ↑ http://timesofindia.hotklix.com/link/News/India/Sujatha-Actress-Dead-Welcome-to-news-website
வெளி இணைப்புகள் [தொகு]
http://www.dailythanthi.com/article.asp?NewsID=638496&disdate=4/7/2011