நக்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நக்மா
NagmaEkJindEkJaan.JPG
நக்மா ஏக் ஜின்ந், ஏக் ஜான் (2006) திரைப்படத்தில்
இயற் பெயர் நந்திதா மொராஜி
பிறப்பு திசம்பர் 25, 1974(1974-12-25)
இந்தியாவின் கொடி மும்பை, இந்தியா
வேறு பெயர் நர்மதா சாதனா
நடிப்புக் காலம் 1990- தற்போதுவரை

நந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா (இந்தி: नघमा) தமிழ், இந்தி,தெலுங்கு திரைப்பட நடிகையாவர். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ் திரைப்படத் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார் என த இந்து பத்திரிகை கூறுகின்றது.[1] இவரது தாயார் இஸ்லாம் மத்தையும் தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவராவார். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவர்.[2] இவர் நடிப்பை பாலிவூட்டில் ஆரம்பித்தார் எனினும் சிலத் திரைப்படங்களின் பின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவருக்கு நல்ல வரவேற்புக் கிட்டியது. இவர் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவராவார். மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், வங்காளி, போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி மொழிகளில் திரைப்படங்களையும் நடித்துள்ளார்.[3]

தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் மற்றும் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துப் புகழ் பெற்றார். காதலன் திரைப்படத்துக்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.லவ் பேர்ட்ஸ் திரைப்படத்தில் இடம்பெரும் நக்மாவின் தொப்புள் காட்சி பெரும் வரவேற்பு பெற்றது.அதில் நக்மாவின் தொப்புளில் முட்டைகளை உடைத்து இட்டு முட்டை ஊற்றப்பம் செய்யப்படும் காட்சி இன்றும் மிக பிரபலமாகும்.[4][5]

நடித்துள்ள திரைப்படங்கள் [தொகு]

நடித்துள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியல் கீழ்வருமாறு[6]

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நக்மா&oldid=1346790" இருந்து மீள்விக்கப்பட்டது