லதா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் எம்.ஜி.ஆர் லதா, லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். இவர் 1970கள் மற்றும் 1980களில் புகழ்ப்பெற்ற நடிகையாக தென்னிந்திய திரையுலகில் இருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

லதா 7, ஜூன் 1953ல் இராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாராணி ஆகியோருக்கு பிறந்தவர். [1] இவருடைய இயற்பெயர் நளினி என்பதாகும். இவர் சேதுபதி குடும்பத்தில் பிறந்தமையால் லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். நடிகர் ராஜ்குமார் சேதுபதி இவருடைய சகோதரராவார். தன்னுடைய நடனத் திறமையாலும், அழகாலும் தமிழகத் திரையுலகில் நாயகியானார். 1973ல் எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் முதன் முதலாக நாயகியாக நடித்தார்[2][3]

திரை வாழ்க்கை[தொகு]

1973ல் எம்.ஜி.ஆர் தயாரித்து நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் முதன் முதலாக நாயகியாக நடித்தார். இத்திரைப்படம் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டது. இந்த வெற்றிப்படத்தின் காரணமாக தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களில் நாயகியாக நடித்தார். அதனால் எம்.ஜி.ஆர் லதா என்று அறியப்படும் அளவிற்குப் புகழ்ப்பெற்றார். எம்.ஜி.ஆர் சிபாரிசால் அக்கினேனி நாகேஸ்வர ராவின் நாயகியாக அந்தால ராமுடு என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார். பிலிம்பேர் விருதுகள் மற்றும் கலைமாமணி விருது போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.

கவனிக்கத்தக்க படங்கள்[தொகு]

சொந்த வாழ்க்கை[தொகு]

லதா சேதுபதி என்ற சிங்கப்பூர் தொழில் அதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சீனிவாசன் மற்றும் கார்த்திக் என்ற இரு மகன்கள் உள்ளனர்..[4][5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=லதா_(நடிகை)&oldid=1639244" இருந்து மீள்விக்கப்பட்டது