அவள் வருவாளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அவள் வருவாளா
200px
அவள் வருவாளா
இயக்குனர் ராஜ்கபூர்
கதை ஸ்ரீநிவாச சக்கரவர்த்தி
நடிப்பு சிம்ரன்
சுஜாதா
அஜித் குமார்
பிரித்வி
இசையமைப்பு எஸ். ஏ. ராஜ்குமார்
ஒளிப்பதிவு கே. பிரசாத்
படத்தொகுப்பு லெனின் & விஜயன்
திரைக்கதை ராஜ்கபூர்
வெளியீடு 15 மே 1998
கால நீளம் 145 நிமிடங்கள்
மொழி தமிழ்

அவள் வருவாளா 1998 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். தெலுங்கில் வெளிவந்த பெள்ளி திரைப்படத்தை மையமாகக் கொண்டு ராஜ்கபூர் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக சிம்ரனும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.

கதை சுருக்கம்[தொகு]

மதுரையில் அவரது பாட்டியுடன் வசித்து வரும் அஜித் குமார் (ஜீவா), முதல் பார்வையிலேயே பிடிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். வங்கி மேலாளராக வேலை கிடைத்த பின்னர் சென்னை செல்லும் அவர், ஒரு பேரங்காடியில் சிம்ரனை (திவ்யா) பார்த்ததும் உடனடியாக காதல் கொள்கிறார். அவரது ஸ்கூட்டரை அடையாளமாக வைத்துக் கொண்டு அவரைத் தேடி அலையும் ஜீவா இறுதியாக நகைச்சுவையாளர்களால் (கவுண்டமணி, செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, நர்ஸ் டக்கரா, கோவை சரளா) சூழப்பட்ட ஒரு காலனியை அடைகிறார். அவர் தேடி வந்த சிம்ரனின் ஸ்கூட்டர் போல அங்கே நிற்கும் ஸ்கூட்டரை நோட்டமிடும் ஜீவாவை, ஸ்கூட்டர் திருடன் என அந்த காலனி மக்கள் சூழ்ந்து கொள்ள, உடனே ஜீவா வாடகைக்கு வீடு தேட வந்ததாக பொய் சொல்கிறார். திவ்யாவும், அவரது தாயாரும் (ஜானகி) அந்த காலனியில் தான் வசிக்கிறார்கள் என தெரிந்ததும், அங்கே குடியேற சம்மதிக்கிறார்.

ஜீவா அங்கே குடிவந்த பின்னர், திவ்யாவின் மனதை கவர முயற்சி செய்கிறார். இதை அறிந்து கொண்ட நகைச்சுவையாளர் கும்பல் ஜீவா, திவ்யாவின் மனதை கவர ஜீவாவுக்கு உதவுகிறார்கள். அவர்கள் திவ்யாவின் திருமணத்தைப் பற்றி ஜானகியிடம் கேட்க, எனினும், திவ்யா தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி ஏற்க மறுத்து விட்டார்.

நடிகர்கள்[தொகு]

  • பிரித்விராஜ் - பிரித்வி
  • வெண்ணிற ஆடை மூர்த்தி
  • கோவை சரளா - சாவித்திரி
"http://ta.wikipedia.org/w/index.php?title=அவள்_வருவாளா&oldid=1694026" இருந்து மீள்விக்கப்பட்டது