ஆளுநர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆளுனர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆளுநர் (Governor) என்றால் ஆட்சி செய்பவர் என்ற பொருள் ஆகும். ஆளுநர் என்ற சொல் gouverneur (of French language) என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லிலிருந்து பிறந்த governor என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகும். பொதுவாக ஆளுநர் என்பவர் இறையாண்மைக்கு உட்படாத அரசு ஒன்றின் அதன் அரசுத்தலைவருக்குக் கீழ் செயல்படும் நிருவாக அதிகாரி ஆவார். கூட்டமைப்பு அரசொன்றில் ஆளுநர் ஒருவர் அரசினால் நியமிக்கப்படலாம் அல்லது மக்களால் அல்லது அரசு உறுப்பினர்களால் தெர்ந்தெடுக்கப்படலாம்.

[தொகு] வெவ்வேறு நாடுகளில் ஆளுநர்கள்

[தொகு] இந்திய ஆளுநர்

இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். இந்த விதி, ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், பொதுவாக, நடுவண் அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் இந்த ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் அரசுத் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். அவர் இல்லாத போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார்.

ஆளுநருக்கு உதவ, மாநில அளவில், ஒரு முதல் அமைச்சர் அல்லது முதல்வர், தன் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையுடன் செயல்படுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுநர்&oldid=1059221" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்