இராஜபாளையம் (ஊர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராசபாளையம்
—  நகரம்  —
இராசபாளையம்
இருப்பிடம்: இராசபாளையம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°27′05″N 77°33′16″E / 9.4515145°N 77.5543812°E / 9.4515145; 77.5543812ஆள்கூறுகள்: 9°27′05″N 77°33′16″E / 9.4515145°N 77.5543812°E / 9.4515145; 77.5543812
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திரு V ராஜாராமன் இ.ஆ.ப [3]
நகராட்சி தலைவர் தனலட்சுமி
சட்டமன்றஉறுப்பினர் கோபால்சாமி
மக்கள் தொகை 1,21,982 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


இராசபாளையம் (ஆங்கிலம்:en:Rajapalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது மதுரையின் தென்மேற்கே 85 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.இங்குள்ள அய்யனார் அருவியும் அருகாமையிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரும் சுற்றுலா இடங்களாகும்.இங்குள்ள பொருளாதாரம் துணி உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டுள்ளது.பல நூற்பு ஆலைகள் உள்ளன. பருத்திச்சந்தையும் குறிப்பிடத்தக்கது. வளர்ப்புநாய் வகைகளில் இராசபாளையம் நாய் மிகவும் அறியப்பட்ட இந்திய இனமாகும்.

வரலாறு[தொகு]

இங்கு 15 நூற்றாண்டு மத்தியில் ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் ராஜூக்கள் குடி பெயர்ந்தனர். அவர்களைக் குறித்தே இந்நகருக்கு இராசபாளையம் என்ற பெயர் வரலாயிற்று. பாளையம் என்ற தமிழ்ச்சொல் கோட்டை என்று பொருள்படும்.[4] பழைய பாளையம் மற்றும் புது பாளையம் என இன்றும் வழக்கில் உள்ளது. விஜயநகர அரசர் புசாபதி சின்ன ராஜூவின் வழித்தோன்றல்களான இவர்கள் முதலில் கீழராசகுலராமனில் தங்கியிருந்து பின்னர் இங்கு குடிபெயர்ந்தனர். மதுரை சொக்கநாத நாயக்கர் கீழ் பணிபுரிந்து வந்தனர். 1885ஆம் ஆண்டு விஜய சொக்கநாத நாயக்கிடம் இருந்து வாங்கி இராசபாளையம் நகரத்தை உருவாக்கினர்.

துவக்கத்தில் விவசாயமே வாழ்வாதாரமாக இருந்தது. 1900களில் வணிக முயற்சிகள் முன்னேறத் துவங்கின. அவர்களது முயற்சியாலும் கடின உழைப்பாலும் பருத்தி சார்ந்த பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. விரைவில் பருத்தி நகரம் என பெயர்பெற்றது.

மக்கள்தொகை[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,30,119 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 64,624 ஆண்கள், 65,495 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 86.25% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.18%, பெண்களின் கல்வியறிவு 80.43% ஆகும்.மக்கள் தொகையில் 10,504 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். .

சுற்றுலா[தொகு]

இணைக்கப்பட்டுள்ள படங்கள் சஞ்சீவி மலையிலிருந்து எடுக்கப்பட்டவை. மேற்குத் தொடர்ச்சி மலை பின்னணியில் உள்ளது.

அய்யனார் கோவில் அருவி[தொகு]

மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் அய்யனார் அருவி அமைந்துள்ளது. இங்கு அய்யனார் கோவில் ஒன்றும் உள்ளது. இவ்விடம் மலையேறும் விளையாட்டுகளுக்கு தகுந்தது. செல்லும் வழியில் உள்ள அணையிலிருந்து நகரின் குடிநீர்த்தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

முக்கிய கல்வி நிறுவனங்கள்[தொகு]

 • P. A. C. ராமசாமி ராஜா பாலிடெக்னிக்
 • Angel Polytechnic College
 • சேத்தூர் சேவக பாண்டியர் அரசு ஆண்கள்/பெண்கள் மேல்நிலை பள்ளி
 • PACM HR SEC.SCHOOL.
 • PACR AMMANI AMMAL GIRLS Hr Sec School.
 • RAMCO ITI
 • RAMCO Engg College,
 • CHINMAYA VIDYALAYA METRICULATION SCHOOL

ஆதாரங்கள்[தொகு]

 1. http://www.tn.gov.in/government/keycontact/197
 2. http://www.tn.gov.in/government/keycontact/18358
 3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
 4. History of Rajapalayam
 5. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2013.

வெளியிணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=இராஜபாளையம்_(ஊர்)&oldid=1612443" இருந்து மீள்விக்கப்பட்டது