இராஜபாளையம் நாய்
| இந்தியாவின் இராஜபாளையம் இன நாய் | |||||||
| தோன்றிய நாடு | |||||||
|---|---|---|---|---|---|---|---|
|
|||||||
|
|||||||
| குறிப்புகள் | இந்திய நாய்ச் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது | ||||||
| நாய் (கேனிஸ் லூபிஸ் ஃபெமிலியாரிஸ்) | |||||||
இராஜபாளையம் நாய் ஆனது இந்திய வேட்டை நாய் வகையைச் சார்ந்தது ஆகும். முன்னைய நாட்களில் இந்நாய் ஆனது தென்னிந்தியாவில் இருந்த வசதி படைத்தோரிடமும் ஆளும் வர்க்கத்திடமுமே இருந்து வந்தது. குறிப்பாக இராஜபாளையம் பகுதியில் மட்டுமே இது அதிகம் காணப்பட்டதால் இந்நாய் இப்பெயர் பெற்றது.
தோற்றம் [தொகு]
இது ஒரு பெரிய நாய். வழக்கமாக 65 முதல் 75 செ.மீ. (25-30 இன்ச்சுகள்) வரை இருக்கும். இது ஒரு வேட்டை நாய் என்பதால் இதனை உகந்த வேலைகளுக்கு மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். இது பிற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டிருப்பினும் பிற குணங்களில் அனைத்துடனும் ஒத்துப் போகிறது.
இதன் முக அமைப்பு காரவன் வேட்டை நாய்களிடமிருந்து முழுதும் வேறுபட்டுள்ளது. இதன் வால் சிறிய வளைவைக் கொண்டுள்ளது.இப்பகுதியில் அதிகம் வாழும் ராஜகம்பளம் நாயக்கர் சமுதாயத்தினர் வேட்டையாடுவதை விருப்பமாக கொண்டுள்ளனர் . இவர்கள் அதிகம் சிப்பிப்பாறை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர் இவர்களே இந்தவகை நாய்களை அதிகம் வளர்த்து வருகின்றனர்.[1]
புற இணைப்புகள் [தொகு]
- இராஜபாளைய நாய்களின் மறுவருகை செய்திக் கட்டுரை
- இதழ்க் கட்டுரை