தனுஷ் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தனுஷ்
Dhanush.jpg
இயற் பெயர் வெங்கடஷ்பிரபு கஸ்தூரிராஜன்[1]
பிறப்பு 1983 ஜூலை 18[1]
இந்தியாவின் கொடி சென்னை, இந்தியா
துணைவர் ஐஸ்வர்யா[1]

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதற் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். பாரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பர்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

தனுஷ் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாம் மகன் ஆவார். இயக்குநர் செல்வராகவன் இவரது சகோதரர். 2004-ஆம் ஆண்டில் தனுஷ், பிரபல தமிழ் நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

திரைப்பட வரலாறு[தொகு]

நடிகராக[தொகு]

2000த்தில்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்பு
10.05.2002 01) துள்ளுவதோ இளமை மகேஷ்
04.07.2003 02) காதல் கொண்டேன் வினோத் பரிந்துரைக்கப்பட்டது, தமிழின் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
05.09.2003 03) திருடா திருடி வாசு
14.01.2004 04) புதுக்கோட்டையிலிருந்து சரவணன் சரவணன்
23.07.2004 05) சுள்ளான் சுப்பிரமணி (சுள்ளான்)
12.11.2004 06) ட்ரீம்ஸ் சக்தி
14.01.2005 07) தேவதையைக் கண்டேன் பாபு
01.09.2005 08) அது ஒரு கனாக்காலம் சீனு
26.05.2006 09) புதுப்பேட்டை கொக்கி குமார்
15.12.2006 10) திருவிளையாடல் ஆரம்பம் திருக்குமரன்
27.04.2007 11)பரட்டை என்கிற அழகுசுந்தரம் அழகுசுந்தரம்
08.11.2007 12) பொல்லாதவன் பிரபு பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த நடிகருக்கான விஜய் விருது
04.042008 13) யாரடி நீ மோகினி வாசு வென்றது, ஆண்டின் சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது
பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது


பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த நடிகருக்கான விஜய் விருது

01.08.2008 சி1) குசேலன் அவராகவே கவுரவ தோற்றம்
14.01.2009 14) படிக்காதவன் ராதாகிருஷ்ணன்(ராக்கி)

2010த்தில்[தொகு]

வருடம் திரைப்படம் பாத்திரம் மொழி
14.01.2010 15) குட்டி குட்டி
05.11.2010 16) உத்தமபுத்திரன் சிவா
14.01.2011 17) ஆடுகளம் கே.பி.கருப்பு வென்றது, சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது
25.02.2011 சி2) சீடன் சரவணன் கவுரவ தோற்றம்
08.04.2011 18) மாப்பிள்ளை சரவணன்
08.07.2011 19) வேங்கை செல்வம்
25.11.2011 20) மயக்கம் என்ன கார்த்திக்
30.03.2012 21) 3 (திரைப்படம்) ராம்
25.01.2013 சி3) "கமத்&கமத்" மலையாளம் கவுரவ தோற்றம்
01.05.2013 சி3) எதிர்நீச்சல்(2013 திரைப்படம்) தமிழ் கவுரவ தோற்றம்
28.06.2013 22) "அம்பிகாபதி (ராஞ்சனா)" குந்தன் இந்தி தமிழ்
19.07.2013 23"மரியான்" மரியான் விஜயன் ஜோசப் தமிழ்
11.10.2013 24) "நய்யாண்டி" சின்ன வண்டு தமிழ்
2014 "வேலையில்லா பட்டதாரி" தமிழ்
2014 "அனேகன்" தமிழ் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கிறது
2014 "பால்கியின் பெபரிடப்படாதப் படம்" இந்தி படத்திற்கான வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது 2014 "வெற்றிமாறனின் இயக்கத்தில்" தமிழ் படத்திற்கான முன்னேற்பாடுகள் நடக்கிறது
2015 "சுராஜின் இயக்கத்தில்" தமிழ் அறிவிக்கப்பட்டுள்ளது


தயாரிப்பாளராக[தொகு]

வருடம் திரைப்படம் இயக்குனர்
2012 3 ஐஸ்வர்யா தனுஷ்
2013 எதிர்நீச்சல்
2014 காக்கா முட்டை
2014 வேலையில்லா பட்டதாரி

பாடகராக[தொகு]

வருடம் பாடல்(கள்) திரைப்படம் இசையமைப்பாளர் குறிப்புகள்
2004 நாட்டு சரக்கு புதுக்கோட்டையிலிருந்து சரவணன் யுவன் சங்கர் ராஜா
2005 துண்ட காணும் தேவதையைக் கண்டேன்
2006 எங்க ஏரியா உள்ள வராத புதுப்பேட்டை யுவன் சங்கர் ராஜா
2010 உன் மேல ஆசைதான் ஆயிரத்தில் ஒருவன் ஜி.வி.பிரகாஷ்
2011 ஒட ஒட ஒட துரம் &காதல் என் காதல் மயக்கம் என்ன ஜி.வி.பிரகாஷ்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Biography for Dhanush". IMDb. பார்த்த நாள் 2007-05-13.

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தனுஷ்_(நடிகர்)&oldid=1748822" இருந்து மீள்விக்கப்பட்டது