இயக்குனர் (திரைப்படம்)
திரைப்பட இயக்குனர், அல்லது இயக்குனர் என்பவர் ஓர் திரைப்படத்தை உருவாக்கப்படுவதை செயல்படுத்துபவர் மற்றும் திரைப்பட தயாரிப்பை வழிகாட்டுபவர்.
ஓர் இயக்குனர் திரைக்கதையை மன ஓவியமாக தீட்டி, திரைப்படத்தின் கலை மற்றும் நாடகத்தன்மையின் அங்கங்களை கட்டுப்படுத்தி தொழில்நுட்பக் கலைஞர்களையும் நடிகர்களையும் வழிகாட்டி தனது மன ஓவியத்தினை வெளிக்கொணரும் கலைஞராகும். சில நேரங்களில் திரைப்பட இயக்குனர்களுக்கு முழு சுதந்திரம் இருக்காது. ஓர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அப்படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்வார். இத்தகைய நேரங்களில் தயாரிப்பாளர் இயக்குனரை கட்டுப்படுத்தும் போக்கு காணப்படலாம்.
ஓர் தொலைக்காட்சி நெடுந்தொடரின் தனிக்காட்சியை இயக்கும்போது இயக்குனரின் பங்கு ஓரளவு குறைந்திருக்கும். நிகழ்ச்சி தயாரிப்பாளரே தொடரின் காட்சிமைப்பையும் உணர்ச்சி வெளிப்பாடுகளையும் பார்வையாளர் பின்னூட்டத்திற்கொப்ப வரையறுத்திருப்பார்.[1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Karl French (2006-08-27). "Seeing the director’s point of view". Financial Times. http://www.ft.com/cms/s/50cfb916-35e9-11db-b249-0000779e2340.html.