சுரேஷ் கோபி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுரேஷ் கோபி | |
|---|---|
| பிறப்பு | சுரேஷ் கோபிநாதன் நாயர் சூன் 26, 1960 [1] கொல்லம், கேரளா, இந்தியா |
| மற்ற பெயர்கள் | சுரேஷ் |
| பணி | திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர்[2] |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1965, 1986 - இன்று வரை |
| பெற்றோர் | கோபிநாதப் பிள்ளை, ஞானலட்சுமி[3] |
| வாழ்க்கைத் துணை | ராதிகா |
| பிள்ளைகள் | லெட்சுமி(இறந்து விட்டார்), கோகுல், பாக்யா, பாவ்னா, மாதவ் |
| இணையதளம் | |
| http://www.bharatsureshgopi.com | |
சுரேஷ் கோபிநாதன் நாயர் என்ற முழுப் பெயரின் சுருக்கமே சுரேஷ் கோபி என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தில் ஜுன் 26, 1960ல் பிறந்தார். இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது சாஸ்தமங்களத்தில் வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார்.