சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம்
Chandra X-ray Observatory
பொதுத் தகவல்கள்
நிறுவனம் நாசா, SAO, CXC
ஏவிய தேதி ஜூலை 23, 1999
சுற்றுவிலக்கம் த/இ
திணிவு 4 800 கிகி, 10 600 இறா
சுற்றுப்பாதை உயரம் 10 000 கிமீ (perigee), 140 161 கிமீ (apogee)
சுற்றுக் காலம் 3858 நிமி, 64.3 மணி
தொலைநோக்கி வகை 4 nested pairs of grazing incidence paraboloid and hyperboloid mirrors
அலைநீளம் எக்ஸ் கதிர்
விட்டம் 1.2 மீ, 3.9 அடி
பெறும் பரப்பு 0.04 மீ² (1 keV இல்), 0.4 அடி² (1 keV இல்)
குவியத் தூரம் 10 மீ, 33 அடி
இணையத்தளம்
http://chandra.harvard.edu/


சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் (Chandra X-ray Observatory) என்பது, கொலம்பியா விண்ணோடத்தில் "எஸ்டிஎஸ்-93" இல், நாசாவால், 1999, ஜூலை 23 ஆம் நாள் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். வெண் குறு விண்மீன்கள் நியூட்ரான் விண்மீன்களாக மாறுவதற்குரிய திணிவெல்லையைத் தீர்மானித்த இந்திய-அமெரிக்கரான சுப்பிரமணியன் சந்திரசேகர் என்னும் இயற்பியலாளரின் பெயரைத்தழுவி இந்த அவதான நிலையத்துக்குப் பெயரிடப்பட்டது. நாசாவின் நான்கு பெரும் அவதான நிலையங்களில் இது மூன்றாவது ஆகும். ஏவுமுன் இது உயர்தர எக்ஸ்-கதிர் வானியற்பியல் வசதி எனப்படது. இது, இன்று நோத்ரோப் குரும்மன் விண்வெளித் தொழில்நுட்பம் என இன்று அழைக்கப்படுகின்ற டிஆர்டப்ளியூ (TRW) நிறுவனத்தினால் அமைக்கப்பட்டது. சந்திரா, முன்னைய எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகளை விட 100 மடங்கு வலுக்குறைந்த எக்ஸ் கதிர்களை உணரக்கூடியது. முக்கியமாக சந்திராவில் பொருத்தப்பட்ட ஆடிகளின் உயர்ந்த கோணப் பிரிதிறன் (angular resolution) காரணமாகவே இது சாத்தியம் ஆகிறது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்