பெப்ரவரி 28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிப்ரவரி 28 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | பெப்ரவரி 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | ||
| MMXIII | ||||||
பெப்ரவரி 28 கிரிகோரியன் ஆண்டின் 59 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 (நெட்டாண்டுகளில் 307) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1710 - சுவீடனில் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்ட டென்மார்க் படைகள் ஹெல்சின்போர்க் என்ற இடத்தில் வைத்து சுவிடியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
- 1784 - ஜோன் வெஸ்லி மெதடிஸ்த திருச்சபையை ஆரம்பித்தார்.
- 1844 - USS பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு ஐக்கிய அமெரிக்க அமைச்சர்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
- 1854 - ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1897 - மடகஸ்காரின் கடைசி அரசியான மூன்றாம் ரனவலோனா பிரெஞ்சுப் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்ப்பட்டார்.
- 1922 - எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
- 1935 - வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் யூஎஸ்எஸ் ஹூஸ்டன் என்ற கப்பல் இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் இடம்பெற்ற போரில் ஜப்பானினால் மூழ்கடிக்கப்பட்டதில் 693 பேர் கொல்லப்பட்டனர்.
- 1947 - தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
- 1953 - ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
- 1958 – கென்டக்கியில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சுமையுந்து ஒன்றுடன் மோதி ஆற்றிற்குள் வீழ்ந்ததில் 26 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
- 1975 - லண்டனில் மூர்கேட் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
- 1986 - சுவீடன் பிரதமர் ஓலொஃப் பால்மே ஸ்டொக்ஹோம் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1991 - முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.
- 1998 - கொசோவோவில் கொசோவோ விடுதலை இராணுவத்தின் மீது செர்பியக் காவற்துறையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
- 2002 - அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.
பிறப்புகள் [தொகு]
- 1896 - பிலிப் என்ச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1965)
- 1901 - லினசு பவுலிக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1994)
- 1915 - பீட்டர் மெடாவர், நோபல் பரிசு பெற்ற பிரேசில் அறிவியலாளர் (இ. 1987)
- 1929 - பிராங்க் கெரி, கட்டிடக்கலைஞர்
- 1930 - லியோன் கூப்பர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- 1931 - துரை விஸ்வநாதன், ஈழத்தின் பதிப்பாளர் (இ. 1998)
- 1939 - தானியேல் சூ, நோபல் பரிசு பெற்ற சீன இயற்பியலாளர்,
- 1948 - ஸ்டீவன் சூ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- 1953 - பால் கிரக்மேன், அமெரிக்க பொருளியல் நிபுணர்
இறப்புகள் [தொகு]
- 1869 - அல்போன்சு டி லாமார்ட்டின், பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர் (பி. 1790)
- 1936 - சார்ல்ஸ் நிக்கோல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1866)
- 1963 - இராசேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் (பி. 1884)
- 2006 - ஓவன் சாம்பர்லெயின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1920)