பேருந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் பேருந்து
பேருந்து [1] என்பது சாலை மேல் பயணிக்கும் ஒரு கனரக வாகனம். ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு ஓட்டுனர் இருப்பார். சில பேருந்துக்களில் நடத்துனரும் இருப்பார். பேருந்துக்கள் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள். இதனால் இவை உலகெங்கிலுமுள்ள அரசாங்கங்களால் பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவைக்காக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய நகர வாழ்க்கையில் பேருந்துக்கள் ஒரு இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றன. மேலும், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நிர்வாகங்கள், சுற்றூலாத்துறைகள் என்று பலதரப்பினர்கள் தங்கள் மாணவர்களின், ஊழியர்களின் மற்றும வாடிக்கையாளர்களின் போக்குவரத்துக்காக பேருந்துக்களை பயன்படுத்துகின்றன. மாநகரப் பேருந்துக்கள் அதிகமுள்ள நகரம் நியூயார்க்.
காட்சியகம் [தொகு]
-
சான்சிபார்,ஆப்பிரிக்கா
-
தமிழக பே. நிலையம்.
-
தபேருந்து நிலையம்.
அடிக்குறிப்பு [தொகு]
- ↑ ஐந்து பேர் என்னும்போது 'பேர்' என்னும் சொல் பொதுமக்களை உணர்த்தும். இந்த வகையில் பொதுமக்களை உந்திச் செல்லும் ஊர்தியைப் 'பேருந்து' என்கிறோம். உந்திச் செல்லத் தன்னுடைமையாக வைத்துக்கொள்ளும் ஊர்திகளைத் 'தன்னுந்து' என்கிறோம்.