தேசிய அறிவியல் நாள் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சி. வி. இராமன்

தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.[1] 2013-ம் ஆண்டிற்காக, "மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் உணவு பாதுகாப்பும்" (Genetically Modified Crops and Food Security) குறித்த கொள்கையை வலியுறுத்தப்படுகிறது.[2]

உசாத்துணை[தொகு]

  1. "National Science Day". பார்த்த நாள் ஃபிப்ரவரி 14, 2013.
  2. "Genetically Modified Crops and Food Security". பார்த்த நாள் ஃபிப்ரவரி 14, 2013.