சுல்பிக்கார் அலி பூட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுல்பிக்கார் அலி பூட்டோ
Zulfikar Ali Bhutto
சுல்பிக்கார் அலி பூட்டோ

பாகிஸ்தானின் 4வது அதிபர்
பதவியில்
டிசம்பர் 20, 1971 – ஆகஸ்ட் 13, 1973
பிரதமர் நூருல் அமீன்
முன்னிருந்தவர் யாஹ்யா கான்
பின்வந்தவர் ஃபசல் இலாஹி சௌத்திரி

பாகிஸ்தானின் 10வது பிரதமர்
பதவியில்
ஆகஸ்ட் 14, 1973 – ஜூலை 5, 1977
அதிபர் ஃப்சல் இலாஹி சௌத்திரி
முன்னிருந்தவர் நூருல் அமீன்
பின்வந்தவர் முகமது கான் ஜுனேஜோ

பாகிஸ்தானின் 5வது வெளிநாட்டமைச்சர்
பதவியில்
ஜூன் 15, 1963 – செப்டம்பர் 12, 1966
முன்னிருந்தவர் முகமது அலி போக்ரா
பின்வந்தவர் சயெட் பிர்சாதா
அரசியல் கட்சி பாகிஸ்தான் மக்கள் கட்சி

பிறப்பு ஜனவரி 5 1928
லார்க்கானா, பிரித்தானிய இந்தியா
இறப்பு ஏப்ரல் 4 1979 (அகவை 51)
ராவல்பிண்டி, பாகிஸ்தான்
சமயம் சுணி இஸ்லாம்[1]

சுல்பிக்கார் அலி பூட்டோ (Zulfikar Ali Bhutto, உருது:ذوالفقار علی بھٹو, சிந்தி: ذوالفقار علي ڀُٽو, ) (ஜனவரி 5, 1928ஏப்ரல் 4, 1979) பாகிஸ்தானின் அரசியல்வாதியாவார். இவர் பாகிஸ்தானின் அதிபராக 1971 முதல் 1973 வரையிலும், அதன் பிரதமராக 1973 முதல் 1977 வரையில் பணியாற்றினார். இவர் பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்குள்ள அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை நிறுவியவர். இவரது மகள் பெனாசிர் பூட்டோ இரண்டு தடவைகள் பாகிஸ்தான் பிரதமராக இருந்து டிசம்பர் 27, 2007 இல் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார்.

சுல்பிக்கார் அலி பூட்டோ ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் ஐக்கிய இராச்சியத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி கற்றவர். இவர் 1979 இல் தனது அரசியல் எதிரியை கொலை செய்யத் தூண்டியமைக்காக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்[2][3].

[தொகு] மேற்கோள்கள்

  1. Pakistan’s Transition from Shia to Sunni Leadership
  2. Blood, Peter Blood (editor) (1994). "Pakistan - ZIA UL-HAQ". Pakistan: A Country Study. Washington: GPO for the Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 2007-12-28. "... hanging ... Bhutto for complicity in the murder of a political opponent..."
  3. "Deposed Pakistani PM is executed". BBC On This Day. British Broadcasting Corporation (1979-04-04). பார்க்கப்பட்ட நாள் 2007-12-28. "sentenced to death for the murder of a political opponent"

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்