பிரதிபா பாட்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரதீபா பட்டீல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேதகைமை
 பிரதிபா பாட்டில்
प्रतिभा पाटिल


பதவியில்
25 ஜூலை 2007 – 24 ஜூலை 2012
பிரதமர் மன்மோகன் சிங்
உதவி தலைவர் அமீத் அன்சாரி
முன்னவர் முனைவர் அப்துல் கலாம்
பின்வந்தவர் பிரணப் முக்கர்ஜி

பதவியில்
8 நவம்பர் 2004 – 23 ஜூலை 2007
முன்னவர் மதன்லால் குரானா
பின்வந்தவர் ஏ. பி. கித்வாய்
அரசியல் கட்சி ஐ.மு.கூ-இ.தே.கா

பிறப்பு 19 திசம்பர் 1934 (1934-12-19) (அகவை 78)
நாத்கோன், பிரித்தானிய இராச்சியம்
வாழ்க்கைத்
துணை
தேவிசிங் ரான்சிங் செகாவத்
பழைய மாணவர் மூலஜி ஜெய்தா கல்லூரி, ஜால்கான்
அரசு சட்ட கல்லூரி, மும்பை
சமயம் இந்துத்துவம்


பிரதிபா பாட்டில் (மராத்தி:प्रतिभा पाटिल, பிறப்பு: டிசம்பர் 19, 1934; பரவலான அழைப்புப் பெயர்: பிரதிபா தாயி, Pratibhaa taai प्रतिभा ताई) இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது குடியரசுத் தலைவரும் ஆவார் [1]. இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இவர் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஆவார். ஜூலை 19, 2007இல் நடந்த குடியாராசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு இவருக்கு எதிராகப் போட்டியிட்ட பைரன் சிங்க் ஷெகாவத் அவர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[2].

மராட்டிய மாநிலத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் பிரதிபா பாட்டில் பிறந்தார். அவரின் தந்தை பெயர் ஸ்ரீ நாராயண ராவ். ஜல்கானில் உள்ள எம். ஜே. கல்லூரியில் முதுகலைமாணி (எம். ஏ.) பட்டம் பெற்றார். பின்னர் அவர் மும்பையில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்று வக்கீலாகவும் பயிற்சி பெற்றார்.

மகாராஷ்டிரா மாநில அவையில் உறுப்பினராக 1962 முதல் 1985 வரை இருந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1991 முதல் 1996 வரையில் இருந்தவர்.2004 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநில ஆளுநராக பணியாற்றினார்.


வெளி இணைப்புகள் [தொகு]

உசாத்துணை [தொகு]

  1. "Patil's victory is landmark event in Maharashtra's history: Deshmukh". UNI. http://www.newkerala.com/july.php?action=fullnews&id=48114. Retrieved 22 ஜூலை 2007. 
  2. அனிதா ஜோஷுவா. "High turnout in Presidential poll". த ஹிண்டு. http://www.hindu.com/2007/07/20/stories/2007072050450100.htm. Retrieved 20 ஜூலை 2007. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிபா_பாட்டில்&oldid=1348029" இருந்து மீள்விக்கப்பட்டது