பிரிஸ்ட் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரிஸ்ட் பல்கலைக்கழகம் என்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகம், இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் என்ற ஊரில் அமைந்துள்ளது. பொறியியல், அறிவியல், கல்வி, மேலாண்மை, கலை ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுள் பொன்னையா ராமஜெயம் குழும நிறுவனங்களும் ஒன்றாகும்.

தோற்றம்[தொகு]

இதுந்நிறுவனம் 1985 ஆம் ஆண்டு பேராசிரியர் பி.முருகேசன் அவர்களால் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற துறையுடன் தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் முறையாக கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1988 ஆம் ஆண்டில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடப்பிரிவில் டிப்ளோமா திட்டத்தை வழங்குவதற்காக இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. அதன் பின்னர், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆராய்ச்சி வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. திருச்சி, கும்பகோணம், புதுச்சேரி, சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் இந்நிறுவனத்தின் வளாகங்கள் உள்ளன. பொன்னையா ராமஜெயம் கல்லூரி 2004 ஆம் ஆண்டில் NAAC மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்து "ஏ" கிரேடு பெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக பகுதியிலுள்ள கல்லூரிகளுள் இந்நிறுவனம் முதன்முறையாக "ஏ" தரம் பெற்றது. இந்த குறிப்பிடத்தக்க சாதனைகளை உணர்ந்த இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் UGC நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்நிறுவனத்திற்கு நிகர்நிலை நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கியது. பொன்னையா ராமஜயம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (பி. ஆர்.எஸ்.டி) என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதியிட்ட உத்தரவின் பேரில் இந்த நிறுவனத்திற்கு தகுதிவாய்ந்த பல்கலைக்கழக தகுதியை வழங்கியது. NCTE (ஆசிரியர் கல்விக்கான தேசிய மன்றம்) B.Ed. வகுப்புகள் நடத்த அங்கீகரித்துள்ளது. மேலும் DEC (தொலைநிலைக் கல்வி கவுன்சில்) PRIST பல்கலைக்கழகத்தை அங்கீகரித்துள்ளது. மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், கல்வி, பார்மசி, மேலாண்மை, தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகள் சென்னையில் நல்லூர் என்ற இடத்தில் ஈ.சி.ஆர். ரோடில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் வழங்கப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டில் PRIST பல்கலைக்கழகம், NAAC மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்தது, அச்சமயம் "B" தரம் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஸ்ட்_பல்கலைக்கழகம்&oldid=3735484" இலிருந்து மீள்விக்கப்பட்டது