நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (Deemed university) இந்தியாவில் உயர்தரத்தில் கல்வி வழங்கும் கல்லூரிகள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துறைகளுக்கு தன்னாட்சிநிலை வழங்கப்படுவதைக் குறிக்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு நிகரான என்ற இந்தத் தகுதியை பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையில் பல்கலைகழக மானியக்குழு சட்டம் 1956இன் பிரிவு 3ன்படி இந்திய மனிதவள அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை வழங்குகிறது.[1][2]
பல்கலைக்கழக மானியக்குழு 1956ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களிடையே ஒருங்கிணைக்கவும் சீர்தரத்தை நிர்ணயிக்கவும் இந்திய நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்டது. [3]
மேலோட்டம்[தொகு]
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்கள் கல்வித்திட்டங்கள், பாடத்திட்டங்கள் இவற்றை தீர்மானிக்க தன்னாட்சி பெறுவதோடு மாணவர் சேர்க்கை, கட்டணங்கள் மற்றும் மாணவர்கான சட்டதிட்டங்கள் குறித்து தங்கள் விதிமுறைகளை செயல்படுத்தும் உரிமையும் பெறுகிறார்கள். இந்தத் தகுதி பெற்ற பல்கலைக்கழகங்கள் தரமான கல்வி நிறுவனங்களாக அறியப்படுகின்றன.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Indian Institute of Space Science and Technology (IISST) Thiruvanathapuram Declared as Deemed to be University". Union Human Resource Development Ministry, Press Information Bureau (July 14, 2008).
- ↑ "IIST gets deemed university status". The Hindu (Jul 15, 2008).
- ↑ UGC Act UGC
- ↑ நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மானியக்குழு இணையதளம்
வெளியிணைப்புகள்[தொகு]
- List of Deemed universities, as of 2008 University Grants Commission
- List of Deemed universities Department of Education
- The UGC Act and the Regulations UGC website.