போர் குற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போர் குற்றம் எனப்படுவது போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாகும். அவ்வாறான சில விதிமுறை மீறல்களில் கொலை, வலிந்து கவரப்பட்ட நிலப்பரப்பில் குடியிருக்கும் அப்பாவி குடிமக்களை சரிவர நடத்தாதல் மற்றும் அவர்களை வதை முகாம்களுக்கு குடியேற்றல், போர்ப் பிணையாளர்களை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல், பிணையாளர்களைக் கொல்லுதல், இராணுவ அல்லது குடிசார் தேவை ஏதும் இல்லாத நிலையில் ஏதேனும் அழிவுகள் மற்றும் நகர்ப்புறங்களையோ அல்லது நாட்டுப்புறங்களையோ அழித்தல் என்பனவும் உள்ளடங்கும்.[1]

சோவியத் போர்க்கைதிகள் செருமனியரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். 3.3 மில்லியன் சோவியத் போர்க்கைதிகள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.

மேலும் நாட்டிற்குள்ளும், அனைத்துலக ரீதியிலும் ஆயுதப் போராட்டங்கள் தொடர்பான அனைத்துலகச் சட்டங்கள் எனலாம். இவ்விதிகளின் படி சில மீறல்கள் மிகவும் பாரதூரமானவை. அப்படி மீறுபவர்கள் உள்ளுரிலும், அனைத்துலக மட்டத்திலும் அக்குற்றங்களுக்கு அவர்களே பொறுப்பாகின்றனர். போரில் ஈடுபடாதவர்கள் அல்லது போரில் தொடர்ந்தும் ஈடுபடாதவர்களைப் பாதுகாப்பதற்காக இவை இயற்றப்பட்டன.

விமானத் தாக்குதல்[தொகு]

ஓர் அரசு தனது சொந்த மக்கள் மீதே விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தினால் அது சர்வதேச போர்க் குற்றமாகும் என பராக் ஒபாமா அறிவித்தார். அதாவது எந்தவொரு நாடும் தனது சொந்த நாட்டு மக்களின் மீதே போர் விமானத்தை பயன்படுத்துதல் போர்க்குற்றம் என்ற செய்தியை கோடிட்டு காட்டியுள்ளார். பிரிட்டன் படைத்துறை அமைச்சரும் இதனை வலியுறுத்தினார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nicolas Werth, Karel Bartošek, Jean-Louis Panné, Jean-Louis Margolin, Andrzej Paczkowski, Stéphane Courtois, The Black Book of Communism: Crimes, Terror, Repression, Harvard University Press, 1999, hardcover, 858 pages, ISBN 0-674-07608-7, page 5.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-03-07. பார்க்கப்பட்ட நாள் 2011-03-21.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2011-03-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்_குற்றம்&oldid=3614744" இலிருந்து மீள்விக்கப்பட்டது