இளவரசர் வில்லியம், கேம்பிரிட்ச் கோமகன்
| இளவரசர் வில்லியம் Prince William |
|
|---|---|
| கேம்பிரிட்ஜ் கோமகன் (மேலும்) | |
| 2010 சூன் 12 இல் இளவரசர் வில்லியம் | |
| வாழ்க்கைத் துணை | கேட் மிடில்டன் |
| முழுப்பெயர் | |
| வில்லியம் ஆர்த்தர் பிலிப் லூயி[N 1] | |
| மரபு | வின்சர் மாளிகை |
| தந்தை | சார்ல்ஸ், வேல்ஸ் இளவரசர் |
| தாய் | டயானா, வேல்ஸ் இளவரசி |
| பிறப்பு | 21 சூன் 1982 புனித மேரி மருத்துவமனை, லண்டன் |
கேம்பிரிட்ஜ் கோமகன் வில்லியம் ஆர்த்தர் பிலிப் லூயி, KG, FRS (பிறப்பு 21 சூன் 1982), வேல்சு இளவரசர் சார்லசுவிற்கும் வேல்சு இளவரசி டயானாவிற்கும் பிறந்த முதல் மகனாவார்.ஐக்கிய இராச்சியத்தின் பட்டத்து அரசி எலிசபெத் II மற்றும் எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆகியோரின் பேரனும் ஆவார். அவரது தந்தையை அடுத்து ஐக்கிய இராச்சியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் ஆட்சித் தலைமைக்கு உரிமை உடையவர்.
ஐக்கிய இராச்சியத்தின் பல பள்ளிகளில் தமது கல்வியை மேற்கொண்டு இறுதியில் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கல்வி இடைவெளிகளில் சிலி, பெலீசு மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் காலம் கழித்தவர், இராணுவத்தில் சேர்ந்தார்.இவரது இளவலான வேல்சு இளவரசர் ஹாரியுடன் குதிரைப்படையில் துணைநிலை படையதிகாரியாக (lieutenant) பணியாற்றினார்.[2] இரண்டாண்டுகள் கழித்து கிரான்வெல் அரச வான்படை கல்லூரியில் வானூர்தி ஒட்டல் பயிற்சி பெற்றார்.[3] 2009ஆம் ஆண்டு, வான்படைக்கு மாற்றப்பட்டு பறத்தல் துணைநிலை அதிகாரியாக உயர்வு பெற்றார். அங்கு உலங்கு வானூர்தி பறத்தலில் தேடல் மற்றும் நிவாரணப்படையில் சேரும் எண்ணத்துடன் பயிற்சி பெற்றார்.[4][5] 2010 இலையுதிர்காலத்தில், தமது பயிற்சிகளை முடித்து துணை வானூர்தி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.ஏப்ரல் 29, 2011 அன்று, இவர் தமது நீண்டநாள் தோழி கேட் மிடில்டனை இலண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில் மணந்தார்.
பொருளடக்கம் |
[தொகு] பட்டங்கள்
- 21 சூன் 1982 – 29 ஏப்ரல் 2011: HRH வேல்சு இளவரசர்
- 29 ஏப்ரல் 2011 – இன்று: HRH கேம்பிர்ட்ஜ் கோமகன்
[தொகு] அடிக்குறிப்புகள்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "alt.talk.royalty FAQ: British royalty and nobility:". Heraldica.org. பார்த்த நாள் 12 October 2008.
- ↑ "BBC NEWS | UK | William joining Harry's regiment". BBC News. Last Updated:. http://news.bbc.co.uk/1/hi/uk/5367862.stm. Retrieved 15 October 2008.
- ↑ "Kate watches William get his wings - World - smh.com.au". Sydney Morning Herald. 12 April 2008. http://www.smh.com.au/news/world/kate-watches-william-get-his-wings/2008/04/12/1207856847954.html. Retrieved 15 October 2008.
- ↑ "Prince William ready for Search and Rescue role". www.meeja.com.au (16 September 2008). பார்த்த நாள் 16 September 2008.
- ↑ Pierce, Andrew (13 January 2009). "Prince William starts as a search and rescue helicopter pilot". The Daily Telegraph (London). http://www.telegraph.co.uk/news/newstopics/theroyalfamily/4218703/Prince-William-starts-as-a-search-and-rescue-helicopter-pilot.html. Retrieved 18 January 2009.
[தொகு] வெளியிணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: இளவரசர் வில்லியம் |