கேட் மிடில்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேட் மிடில்டன்
பிறப்பு கேதரைன் எலிசபெத் மிடில்டன்
9 ஜனவரி 1982 (1982-01-09) (அகவை 33)
ரீடிங் , பெர்க்சையர், இங்கிலாந்து
கல்வி முதுகலை (கலை)
படித்த கல்வி நிறுவனங்கள் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்
பெற்றோர் மைக்கேல் பிரான்சிசு மிடில்டன்
கரோல் எலிசபெத் (மணத்திற்கு முன் கோல்ட்ஸ்மித்)
உறவினர்கள் பிப்பா மிடில்டன்(சகோதரி)
ஜேம்ஸ் மிடில்டன் (சகோதரர்)

காதரைன் எலிசபெத் "கேட் " மிடில்டன் (Catherine Elizabeth "Kate" Middleton , பிறப்பு 9 சனவரி 1982) இங்கிலாந்து நாட்டின் வேல்சு இளவரசர் வில்லியத்தின் மனைவி ஆவார். அவர்களது திருமணம் ஏப்ரல் 29, 2011 அன்று வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில் நடைபெற்றது.

மிடில்டன் பெர்க்சையரில் வளர்ந்தவர். மார்ல்பரோ கல்லூரியில் பயின்று பின்னர் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்திற்கு மேல்படிப்புக்குச் சென்றார். அங்குதான் 2001ஆம் ஆண்டு வேல்சு இளவரசர் வில்லியமைச் சந்தித்தார். ஒருவரையொருவர் விரும்பிய நேரத்தில் தன்னை ஊடகங்கள் பின்தொடர்ந்து தொல்லைப்படுத்துவதாக புகார் கூறினார். ஏப்ரல் 2007ஆம் ஆண்டில் ஊடகங்கள் இருவருக்குமிடையே பிளவு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தன. நண்பர்களாக தங்கள் உறவைத் தொடர்ந்த இருவரும் 2007ஆம் ஆண்டிலேயே மீண்டும் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து மிடில்டன் பல அரசாங்க நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார். அவருடைய புதுப்பாங்கு உணர்வுகளுக்காக பாராட்டப்பட்டு பல "சிறப்பாக ஆடை அணிந்தவர்கள்" பட்டியல்களில் இடம் பெற்றுள்ளார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கேட்_மிடில்டன்&oldid=1387990" இருந்து மீள்விக்கப்பட்டது