பேரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரன் என்பது மகன் அல்லது மகளின் மகன் என்பதைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகும். தந்தையின் அல்லது தாயின் தந்தையைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகவும் இது பயன்படுவதுண்டு. ஒரு குடும்பத்தின் ஒன்றுவிட்ட தலைமுறை ஆண்களில் ஒரு தலைமுறையினருக்கு மற்றத் தலைமுறையினரின் உறவுமுறை இதுவெனலாம். ஒருவருக்கு அவரது சொந்தப் பிள்ளைகளின் ஆண் பிள்ளைகளை மட்டுமன்றி, அவரது உடன்பிறந்தோரின் பிள்ளைகளையும் பேரன் என்றே குறிப்பிடுவர். சில சமயங்களில், உடன்பிறந்தாரின் பிள்ளைகளைப் "பேரன் முறை கொண்டவன்" அல்லது "பேரன் வேணும்" என்றும் குறிப்பிடுவது உண்டு.

சொற்பிறப்பு[தொகு]

"பேரன்" என்ற சொல் "பெயரன்" என்னும் சொல்லிலிருந்து மருவியது. ஒரு காலத்தில் தமிழர்களில் பலர் தமது ஆண் பிள்ளை ஒருவருக்குத் தமது தந்தையின் பெயரை இடுவது வழக்கம். தற்காலத்திலும் சில குடும்பங்களில் இவ்வழக்கு உள்ளது. இவ்வாறு பெயரைக் கொண்டவன் என்ற பொருளில் பெயரன் என்னும் சொல் உருவானதாகச் சொல்லப்படுகின்றது.

ஒருவர் தனது மூத்த தலைமுறைப் பேரர்களை அழைக்கும்போது "தாத்தா", "பாட்டா" போன்ற சொற்களால் அழைப்பர் சில பகுதிகளில் "அப்பு" போன்ற சொற்களையும் பயன்படுத்துவது உண்டு. தற்காலத்தில், சில தமிழ்ப் பிள்ளைகள் தமது மூத்த தலைமுறைப் பேரர்களைக் குறிப்பிடும்போது தந்தையின் தந்தையை "அப்பப்பா" என்றும் தாயின் தந்தையை "அம்மப்பா" என்றும் அழைக்கின்றனர். இச் சொற்கள் "அப்பாவின் அப்பா", "அம்மாவின் அப்பா" என்பவற்றின் சுருக்கப் பெயராக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரன்&oldid=559528" இலிருந்து மீள்விக்கப்பட்டது