அன்ட்ரே அகாசி
| நாடு | ||
| வசிப்பிடம் | லாஸ் வெகாஸ், நெவாடா, அமெரிக்கா | |
| பிறந்த திகதி | ஏப்ரல் 29, 1970 | |
| பிறந்த இடம் | லாஸ் வெகாஸ், நெவாடா, அமெரிக்கா | |
| உயரம் | 5 அடி 11 அங்குலம் (1.80 மீ) | |
| நிறை | 177 lb (80 கிலோ கிராம்) | |
| தொழில்ரீதியாக விளையாடியது | 1986 | |
| ஓய்வு பெற்றமை | செப்டம்பர் 3, 2006 | |
| விளையாட்டுக்கள் | Right; Two-handed backhand | |
| வெற்றிப் பணம் | $31,110,975 | |
| ஒற்றையர் | ||
| சாதனை: | 868-273 | |
| பெற்ற பட்டங்கள்: | 60 | |
| அதி கூடிய தரவரிசை: | No. 1 (ஏப்ரல் 10, 1995) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | W (1995, 2000, 2001, 2003) | |
| பிரெஞ்சு ஓப்பன் | W (1999) | |
| விம்பிள்டன் | W (1992) | |
| அமெரிக்க ஓப்பன் | W (1994, 1999) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 40-42 | |
| பெற்ற பட்டங்கள்: | 1 | |
| அதிகூடிய தரவரிசை: | No. 123 (ஆகஸ்டு 17, 1992) | |
| ஒலிம்பிக் பதக்கங்கள் | |||
|---|---|---|---|
| ஆண்களுக்கான டென்னிஸ் | |||
| தங்கம் | 1996 அட்லான்டா | ஒற்றையர் | |
அன்ட்ரே அகாசி (Andre Agassi பிறப்பு ஏப்ரல் 29, 1970) அமெரிக்க ரெனிஸ் விளையாட்டு வீரர். உலகின் முன்னணி டென்னிஸ் ஆட்டக்காரர்களுள் ஒருவர். எட்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1996 இல் ஒலிம்பிக்கில் ரெனிஸ் விளையாடி தங்கப்பதக்கத்தைப் பெற்றவர்.
இவர் நடிகையான Brooke Shields ஐ 1997 இல் திருமணம் செய்தார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்து பிரபல டென்னிஸ் வீராங்கனையான ஸ்ரெஃபி கிராஃப் ஐ திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
ஜூன் 24, 2006 ல் , 2006 U.S. Open போட்டிகளுக்குப் பின்பு தான் டெனிஸ் விளையாட்டு உலகில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார், இது இவரின் 21 ஆண்டு தொழில் ரீதியான டெனிஸ் விளையாட்டின முடிவாக அமைந்தது. ஞாயிறு, செப்டம்பர் 3, 2006, ல் இவர் தன்னுடைய இறுதி ஆட்டத்தில விளையாடினார். இதில் இவர் பென்ஜமின் பெக்கர் என்பவரிடம் மூன்றாவது சுற்றிலே நான்கு செட்களை இழந்ததன் மூலம் தோல்விகண்டார்.