உரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உரம் பரவப்படுகிறது

உரம் (Fertiliser) என்பது விளை நிலத்தில் உள்ள ஊட்டச் சத்துகளைப் பெருக்கும் பொருட்டு இடப்படுவது.

பொருளடக்கம்

[தொகு] உர வகைகள்

உரங்கள் பொதுவாக இலை, தழை, எரு போன்று இயற்கை உரமாகவோ அல்லது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட செயற்கை உரமாகவோ இருக்கலாம்.

உரம் பாஸ்பரஸ், பொட்டாசியம், நைதரசன் ஆகிய முக்கிய தனிம ஊட்டச் சத்துகளையும் கால்சியம், மக்னீசியம், கந்தகம் ஆகிய இரண்டாம் நிலை ஊட்டச் சத்துகளையும் இரும்பு, மயில் துத்தம்,போரான், மாலிப்டினம்,தாமிரம், மாங்கனீஸ் போன்ற தாதுப்பொருட்களையும் நிலத்திற்கு தருகிறது.

[தொகு] சுற்றுச் சூழல் மாசடைதல்

அளவுக்கு மீறிய உரமிடுவதால், நிலம், பயிர் மற்றும் உணவு ஆகியவை நச்சுத் தன்மையடைவதுடன் அதிகப்படியான உரங்கள் அல்லது உரங்களிலுள்ள தேவையற்ற பொருட்கள் பாசன நீரால் கழுவிச்செல்லப்பட்டு ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் தேங்குகிறது. அவற்றிலுள்ள வேதியியற் கனிமங்களினால் நீர் நிலைகளும் நச்சுத் தன்மை அடைகின்றன. மேலும், கழிவிலுள்ள நைதரசன் மற்றும் அதிகப்படியான ஊட்டச் சத்துக்கள் நீர் நிலைகளில் பாசிப் பெருக்கதிற்கும் (algal bloom) அதனால் ஏற்படும் ஆக்சிஜன் குறைவிற்கும் (eutrophication) காரணமாகின்றது. உரங்களில் இருந்ட்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை நீர்நிலைகளில் சேர்ப்பதற்கு முன் உயிரியல் முறையில் நைட்ரேட்டுகளாக மாற்றியோ அல்லது நைதரசனை அகற்றியோ சூழல் மாசடையாது ஓரளவு காக்கமுடியும்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்